சோயா பீன்ஸ் தோசை

தேதி: February 4, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. லாவண்யா அவர்கள் வழக்கியுள்ள சோயா பீன்ஸ் தோசை குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய லாவண்யா அவர்களுக்கு நன்றிகள்.

 

சோயா பீன்ஸ் - 2 கப்
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
துருவிய கேரட் - ஒரு மேசைக்கரண்டி
துருவிய முள்ளங்கி - ஒரு மேசைக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
அரிசி மாவு - 2 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு


 

தேவையான‌ பொருட்களைத் தயாராக‌ எடுத்து வைக்கவும். வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கேரட் மற்றும் முள்ளங்கியைத் துருவி வைக்கவும்.
சோயா பீன்ஸை 2 மணி நேரங்கள் ஊற வைக்கவும்.
ஊறியதும் அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவுடன் வெங்காயம், தக்காளி, கேரட், முள்ளங்கி, அரிசி மாவு, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.
தோசைக் கல்லைச் சூடாக்கி, கலந்த மாவை தோசையாக வார்த்தெடுக்கவும்.
சுவையான, ஆரோக்கியம் நிறைந்த சோயா பீன்ஸ் தோசை தயார்.

சோயா பீன்ஸை ஊற வைத்ததோடு மட்டுமல்லாமல் முளைக்கட்டிய பிறகு அரைத்து பயன்படுத்தினால் அதிகப்படியான வைட்டமின் இ நமக்கு கிடைக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்