தேதி: February 4, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. மகாலெட்சுமி ப்ரகதீஷ்வரன் அவர்கள் வழக்கியுள்ள சோயா வெஜ் மிக்ஸ் சுண்டல் குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய மகாலெட்சுமி அவர்களுக்கு நன்றிகள்.
சோயா பீன்ஸ் - ஒரு கப்
பொடியாக நறுக்கிய கேரட் - அரை கப்
குடைமிளகாய் - அரை கப் (பொடியாக நறுக்கியது)
தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

சோயா பீன்ஸை முதல் நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் நன்றாகக் கழுவி குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து 2 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, குடை மிளகாய், கேரட் போட்டு வதக்கவும்.

அத்துடன் வேக வைத்துள்ள சோயா பீன்ஸைச் சேர்த்து மிளகாய்த் தூள், பெருங்காயத் தூள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

ஹெல்தியான சோயா வெஜ் மிக்ஸ் சுண்டல் ரெடி. தேங்காய்த் துருவல் சேர்த்து பரிமாறவும்.

Comments
Itits very healthy dish.
Itits very healthy dish. Surely I will try. Thank you
மோகனப்ரியா
வருகைக்கு நன்றி ப்ரியா. ட்ரை பண்ணிப்பாருங்கள்.
வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!
சோயா வெஜ் மிக்ஸ் சுண்டல்
குறிப்பினை வெளியிட்ட அட்மின் குழு மற்றும் குறிப்பினை வழங்கிய திருமதி. மகாலெட்சுமி அவர்களுக்கும் நன்றி.
சுவை மிகவும் அருமையாக இருந்தது. மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடலாம்.
நன்றி!
வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!