கிட்ஸ் க்ராஃப்ட் - மினி டாய் ஹவுஸ்

தேதி: February 5, 2015

5
Average: 5 (5 votes)

 

டூத் பேஸ்ட் பெட்டிகள்
செலோ டேப்
கத்தரிக்கோல்
க்ராஃப்ட் நைஃப்
பென்சில்
க்ளூ
ஸ்கேல்
கட்டிங் மாட்
ஃபெல்ட் பேனைகள் (வர்ணம் தீட்ட விரும்பினால்)

 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
பெட்டியின் இரண்டு பக்கங்களையும் கவனமாகப் பிரித்து எடுக்கவும்.
அகலமான இரண்டு பக்கங்களையும் படத்தில் உள்ளது போல் இணைத்து டேப் போடவும்.
பெட்டியின் அளவுக்கேற்றபடி வீட்டின் உயரத்தைத் தெரிவு செய்து, க்ராஃப்ட் நைஃபால் குறுக்கே வெட்டி எடுக்கவும்.
வீட்டின் முகப்பாக வரும் பக்கத்தில் L வடிவம் ஒன்று வெட்டவும். நீளமான கோட்டைக் கத்தரிக்கோலால் வெட்டவும். குறுக்குக் கோட்டிற்கு க்ராஃப்ட் நைஃப் பயன்படுத்தவும். வெட்டிய துண்டின் மேல் ஸ்கேலை வைத்து மடிப்பு ஒன்றை அழுத்தி விடவும்.
வீட்டின் மறு பக்கம் H வடிவம் ஒன்று (க்ராஃப்ட் நைஃபால்) வெட்டவும். இரண்டு பக்கத்தையும் ஸ்கேலை வைத்து கதவுகளை போல் மடித்து விடவும்.
மேலிருந்து பார்க்க வீடு இப்படித் தெரியும்.
பெட்டியின் மீதமிருக்கும் பகுதியை தட்டையாக்கவும். அதன் சிறிய பக்கத்திலிருந்து கூரைக்கான பகுதியை வெட்டவும். நீளம் வீட்டை விட 6 மில்லி மீட்டர் அதிகமாக இருக்க வேண்டும்.
வெட்டிய துண்டை வீட்டின் மேற் பகுதியில் வைத்து க்ளூ தடவி ஒட்டவும்.
2 மில்லிமீட்டர் அகலத்தில் நீளமாக ஒரு துண்டு வெட்டி எடுக்கவும்.
இதை ஜன்னலின் நடுவே உட்புறமாக க்ளூ வைத்து ஒட்டி விடவும்.
செலவில்லாத அழகான விளையாட்டு வீடு தயார். ஒவ்வொரு பெட்டியிலிருந்தும் இரண்டு வீடுகள் செய்யலாம். தாங்களே தங்கள் விளையாட்டுப் பொருட்களைச் செய்வதைக் குழந்தைகள் விரும்புவார்கள். அவர்களது விருப்பம் போல வீடுகளுக்கு வர்ணம் தீட்டிக் கொள்ளலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

கியூட் :) எங்க வீட்டு வாலு, முதல்ல கத்தியை தான் கேட்கும்... நான் தான் வெட்டணும் என்று.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முதல் ஆளா கமண்ட் போட்டு, ரேட்டிங் எல்லாம் கொடுத்த வனிக்கு என் அன்பு நன்றிகள். :-) உங்க கமண்ட் பார்த்துத்தான் க்ராஃப்ட் வந்திருக்கிறது தெரிஞ்சுது. :-)

இதுக்குப் பின்னால ஒரு கதை இருக்கு வனி. ஆனை வர முன்னே வரும் மணியோசை போல இந்த க்ராஃப்ட். :-)

//முதல்ல கத்தியை தான் கேட்கும்...// ம்... ;) கேக்கா இது!! ;-)

‍- இமா க்றிஸ்

உதவிக்கு நன்றி. :-)

‍- இமா க்றிஸ்