ஃபிஸி ஃப்ரூட் ட்ரிங்க் (Fizzy Fruit Drink)

தேதி: February 7, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வாழைப்பழம் (நடுத்தரமானது) - 2
தோடம்பழம் - ஒன்று
ஆப்பிள் - பாதி
ஸீரோ ஸ்ப்ரைட் - அரை கோப்பை


 

தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். செய்ய ஆரம்பிக்கும் முன்பே ஸ்ப்ரைட்டைக் குளிரூட்டியில் வைத்து விடவும்.
ஆப்பிளைத் தோல் சீவி, நடுப் பகுதியை நீக்கி விட்டு, துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
வாழைப்பழத்தைச் சிறு வட்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
தோடம்பழத்தைப் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் நறுக்கி வைத்துள்ள பழங்களை போட்டு தோடம்பழ இரசத்தை சேர்த்து நன்கு அடிக்கவும்.
கடைசியாக ஸ்ப்ரைட்டைச் சேர்த்து அடித்து எடுக்கவும்.
உடனடியாக உயரமான கண்ணாடி டம்ளருக்கு மாற்றவும். க்ளேஸ்ட் செர்ரி, புதினா இலை வைத்து அலங்கரித்து, நீளமான கரண்டி வைத்துப் பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹெல்தி ஜூஸ் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

டார்லிங்னு கூப்ட‌ வேணாம்னு சொல்லிட்டிங்க‌. எவ்ளோ ஆசையா கூப்டேன் தெரியுமா? அப்டி கூப்டலனா தேங்க்ஸ்னு சொல்லிட்டிங்க‌. ஓ.கே. உங்க‌ பேச்ச‌ கண்டிப்பா கேப்பேன் டார்லிங். சாரி டியர். டார்லிங்னு தான‌ கூப்ட‌ கூடாதுனு சொன்னீங்க‌. டியர்னு கூப்ட‌ வேணாம்னு சொல்லவே இல்லையே. சரி மேட்டர்க்கு வருவோம். ஃபிஸி ஃப்ரூட் ட்ரிங்க் சூப்பரா இருக்கு. செஞ்சிட்டா போச்சி. எல்லா பழமும் இருக்கு.

தோடம் பழம்னா ஆரஞ்ச் பழமா? அந்த‌ தோடம் பழம் புழியறப்போ உங்க‌ வளையலும் சூப்பரா இருக்கு. கலக்கறீங்க‌ டியர்.

எல்லாம் சில‌ காலம்.....

தோடாம் பழம்னா என்ன?

ஹெல்த்தி ட்ரிங் பார்க்கவே சுவைக்க தோனுது :) உங்க குறிப்புகள் எப்பவும் வித்தியாசமும் சத்தும் நிறைந்த குறிப்புகள் :) வாழ்த்துக்கள் மா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஃபாத்திமா சமீஹா... ஆரஞ்சு அது.

தோடைதான் தமிழ் என்று இத்தனை வருடமும் நினைத்திருந்தேன். இலங்கயைரைப் பொறுத்த வரை இது தோடை / தோடம்பழம். இல்லையோ! அப்போ... இது 'தொடங்' என்கிற சிங்களச் சொல் அடியிலிருந்து வந்த சொல்லா? அப்படியானால் ஆரஞ்சுக்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? 'ஆரஞ்சு' நிச்சயம் தமிழ்ச்சொல் அல்ல. ஆங்கிலம் அது. என்னிடம் உள்ள தமிழ் அகராதி, 'சர்க்கரை நாரத்தை' என்கிறது. அப்படிப் போட்டால் இங்கு பத்துப் பேராவது கேள்வி எழுப்புவீர்கள். :-)

யாராவது தெரிந்தவர்கள் சொல்லி உதவுங்கள்.

‍- இமா க்றிஸ்

:-) அது ஹெல்தி என்று சொல்ல மாட்டேன். ஃபிஸி ட்ரிங்க் ஹெல்தி இல்லை. :-) பழங்களை அடிக்காமல், வெட்டாமல், சமைக்காமல் சாப்பிடுவதுதான் சத்து. வெயில் கொடுமை தாங்க முடியாமல் விடுமுறையில் செய்த விளையாட்டு இது. சர்க்கரை சேர்க்காமல் சாப்பிட சுவையான ஒரு குறுக்கு வழி, அவ்வளவுதான். :-)

‍- இமா க்றிஸ்

நானே கண்டுபிடிச்சுட்டேன். :-)
'ஆடாதோடை' என்று எல்லாம் மூலிகை இருக்கே! அப்போ தோடை தமிழ்ச்சொல்லேதான். :-)

‍- இமா க்றிஸ்

'ஆடாதோடை' ‍ எனக்கு தெரிந்து தவறான‌ வார்த்தை. அது 'ஆடுதொடா'. அதை ஆடு தின்னாது. அது மருவி ஆடாதோடை என்றானது.

உங்கள் தமிழ் ஆர்வம் எனக்கு ரொம்ப‌ பிடிக்கும்.

அன்புடன்
ஜெயா

I think u r right ;) amma says the same.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங்கள் இருவரும் சொன்னது சரிதான். ம்... இதுதான் ஆடு தின்னாப் பாலையா! அல்லது ஆடு தொடா வேறா!

சரி... ஆரஞ்சுக்கு தமிழ் என்ன???

‍- இமா க்றிஸ்

'ஆடு தொடா' என்பதும் 'ஆடு தின்னா பாளை' என்பதும் வேறு வேறு.

ஆரஞ்சுக்கு தமிழ்.... ம்ம்ம்.... கமலா? (பாண்டிச்சேரியில் இருக்கும்போது கமலாப் பழம் என்றுதான் விற்கும்.) சாத்துக்குடி? இல்லையோ. சரியா தெரியலையே.

ஜெயா

//நரந்தம்பழம்// //தோடைப்பழம்// - இரண்டும் ஒன்றா இல்லையா என்றே குழப்பம் இப்போது எனக்கு ;) நரந்தம்பழம் / நரந்தை என்பது எங்க ஊரில் நார்த்தங்காய் என்று நினைக்கிறேன். அதை தான் ஊறுகாய் போடுவோம். மேல் தோல் மொரடாக இருக்கும். கூகில் கிட்ட கேட்டா ஆரஞ்சு பழத்துக்கு தமிழ் பேர் என்று நரந்தம்பழம், தோடைப்பழம் என்கிறார். நரந்தம் என்பது நார்த்தங்காய் தான் என்றால் இவை இரண்டும் ஒன்றல்ல. தோடைப்பழத்தின் வகைகள் தான் கமலாப்பழம், சாத்துக்குடி போன்றவை. அதனால் அவை ஆரஞ்சுக்கு பெயராக இருக்க முடியாது. அதுவும் ஒருவகை, அவ்வளவு தான். குழப்பிப்புட்டீங்களே இமா ;) இந்த குழப்பத்துல இணையத்தில் மூழ்கி அடுப்புல டீயை விட்டுட்டேன் 3:) நம்ம இதுக்கு தனி இழை போட்டு ஆராய்ச்சி பண்ணுவோம்... இல்லன்னா உங்க குறிப்பில் பதிவுகள் எண்ணிக்கை கண்ணைக்கட்டிடும் :P //APPLE - அரத்திப்பழம், குமளிப்பழம் ORANGE - தோடைப்பழம், நரந்தம்பழம் // - பாருங்க... ஆராய்ச்சி செய்ய நிறைய விஷயம் இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆரஞ்சு என்பதும் தமிழ் தான். இது ஆறு + ஐந்து(அஞ்சு) = ஆரைந்து (ஆரஞ்சு). அதாவது ஆறையும் ஐந்தையும் கூட்டினால் 11 வரும். ஆரஞ்சு பழத்தில் 6+5=11 சுளைகள் இருக்கும். அதனால் தான் அதை ஆரைந்து என்கிறோம். ஆரைந்து தான் மழுவி ஆரஞ்சு பழம் வந்தது.

எல்லாம் சில‌ காலம்.....

இமா அம்மா ஜூஸ் ஈஸி அன்ட் சூப்பர் டிப்ஸ்.
ஆரஞ்சு பழம் தான் கரெக்ட்,

ஆறு + ஐந்து(அஞ்சு) = ஆரைந்து (ஆரஞ்சு).
அதற்கு பால நாயகி சிஸ் சொன்ன‌ விளக்கம் தான்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

//ஆரஞ்சு பழம் தான் கரெக்ட்// :-) இலங்கைத் தமிழர்கள் ஆரஞ்சுப்பழம் என்றே சொல்ல மாட்டார்கள். ஒன்றில் தோடம்பழம் அல்லது orange தான். :-)

இங்கு வந்த கருத்துகளைப் படித்ததன் பின்னால் மீண்டும் கூகுள் செய்ய வேறு சில விபரங்கள் கிடைத்தன. அறுசுவைக்கு வந்ததால்தான் இப்படியெல்லாம் ஆராய்ச்சி நடத்துகிறேன். அல்லாவிட்டால் தொடம்பழம் மட்டும்தான். :-)

‍- இமா க்றிஸ்

////நரந்தம்பழம்// //தோடைப்பழம்// - இரண்டும் ஒன்றா இல்லையா// இல்லை. :-)

//நரந்தம்பழம் / நரந்தை என்பது எங்க ஊரில் நார்த்தங்காய் என்று நினைக்கிறேன்.// :-) ஆராய்ச்சி வேணாம், விட்டுரலாம் வனி. :-)

//ஊறுகாய் போடுவோம்.// எலுமிச்சை / நாங்க தேசிக்காய்லதான் ஊறுகாய் போடுவோம். ;D

//நரந்தம்பழம்,// சிங்களத்தில் நாரங். அது பெருசா இருக்கும். கசக்கும். கூகுள்ள நானும் பார்த்தேன். இரண்டு பேயரும் போட்டிருந்தாங்க.

//கமலாப்பழம், சாத்துக்குடி// இலங்கைல கேட்டே அறிய மாட்டோம்.

//குழப்பிப்புட்டீங்களே இமா// நான் எங்க குழப்பினேன் வனி. :-) என் பாஷைல குறிப்பை அனுப்பினேன். டவுட்டு கேட்டாங்க. குழம்பி, குழப்பியும் விட்டிருக்காங்க. இது... கருணைக் கிழங்கு மாதிரி. :) ஒரு ஊர்ல சரியா இருந்தா இன்னொரு இடத்துல தப்பா இருக்கும்.

//அடுப்புல டீயை விட்டுட்டேன் 3:) // அவ்வ்! அடுப்புல டீயை காய்ச்சுவீங்களா! ம்.. இதுவே புதுசா இருக்கு எனக்கு. //இல்லன்னா உங்க குறிப்பில் பதிவுகள் எண்ணிக்கை கண்ணைக்கட்டிடும் // என்னடா இத்தனை பதிவு இருக்கு என்று ஆச்சரியப்பட்டுத்தான் இப்போது நானே இங்கு வந்தேன். :-)

‍- இமா க்றிஸ்

//'ஆடு தொடா' என்பதும் 'ஆடு தின்னா பாளை' என்பதும் வேறு வேறு. // தகவலுக்கு நன்றி ஜெயா.

‍- இமா க்றிஸ்