ஆலு மட்டர்

தேதி: February 9, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. நித்யா கோபால் அவர்களின் ஆலு மட்டர் குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய நித்யாஅவர்களுக்கு நன்றிகள்.

 

உருளைக்கிழங்கு - அரை கிலோ
பட்டாணி - ஒரு கப்
வெங்காயம் - 6 (மீடியம் சைஸ்)
தக்காளி - கால் கிலோ
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மல்லித் தூள் - ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
நெய் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி


 

வெங்காயத்தைப் பெரிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பட்டாணியை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை பெரிய துண்டுகளாக் நறுக்கி வேக வைத்து எண்ணெயில் வதக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் தாளித்து இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். அதனுடன் வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும்.
வெங்காய விழுது வதங்கியதும் தக்காளியைப் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
அதன் பிறகு மல்லித் தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத் தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். அதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கு, பட்டாணி, உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
கலவை கொதித்து கெட்டியான பதம் வந்ததும் மல்லித்தழை தூவி இறக்கவும்.
சுவையான ஆலு மட்டர் ரெடி. இது சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எல்லா படமும் சூப்பருங்க. நல்லா ப்ரெசண்ட் பண்ணிருக்கீங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கும், குறிப்பினை வழங்கிய நித்யா கோபால் அவர்களுக்கும் மிக்க நன்றி.

இதுவும் கடந்து போகும்

மிக்க நன்றி அக்கா.

இதுவும் கடந்து போகும்