கீரை கார்ன் வடை

தேதி: February 9, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. லாவண்யா அவர்களின் கீரை கார்ன் வடை குறிப்பு சில மாற்றங்களுடன் இங்கே செய்துகாட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய லாவண்யா அவர்களுக்கு நன்றிகள்.

 

ஸ்வீட் கார்ன் - 3
பொட்டுக்கடலை - அரை கப்
அவல் - அரை கப்
சிகப்பு மிளகாய் - 4
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - அரை அங்குலம்
முளைக்கீரை - அரை கப்
சீரகம் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரித்தெடுக்க


 

அவலை 5 முதல் 10 நிமிடம் ஊற வைக்கவும். கீரையை ஆய்ந்து அலசி பொடியாக நறுக்கி வைக்கவும்.
மிக்ஸியில் பச்சை மிளகாய், சிகப்பு மிளகாய், சீரகம், பொட்டுக்கடலை சேர்த்து பொடி செய்த பின்னர் ஸ்வீட் கார்ன், உப்பு சேர்த்து வடை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய கீரை மற்றும் அரைத்த ஸ்வீட் கார்ன் கலவையை போடவும். அதனுடன் அவலை நன்கு தண்ணீர் இல்லாமல் பிழிந்து சேர்த்து மாவை பிசைந்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை வடைகளாக தட்டி போட்டு பொரித்தெடுக்கவும்.
சுவையான கீரை கார்ன் வடை தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கார்ன் வடை பார்க்கவே கிரிஸ்பியா இருக்கு,
ஈஸி டிப்ஸும் கூட‌.சூப்பர்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கும், குறிப்பினை வழங்கிய லாவண்யா அவர்களுக்கும் மிக்க நன்றி.

இதுவும் கடந்து போகும்

சுபி மிக்க நன்றி.

இதுவும் கடந்து போகும்

கீரை கார்ன் வடை பார்க்கவே சாப்பிட‌ தூண்டுது.. புதுமையான‌ ரெசிபி.. சீக்கிரமே செய்து பார்க்கிறேன்..

"எல்லாம் நன்மைக்கே"