கேப்சிகம் சன்னா மசாலா

தேதி: February 9, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. லாவண்யா அவர்களின் கேப்சிகம் சன்னா மசாலா குறிப்பு சில மாற்றங்களுடன் இங்கே செய்துகாட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய லாவண்யா அவர்களுக்கு நன்றிகள்.

 

சன்னா - ஒரு கப்
குடைமிளகாய் - ஒன்று
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
தனியாத் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - கால் தேக்கரண்டி
கசூரி மேத்தி - அரை தேக்கரண்டி
ஆம்சூர் பவுடர் - கால் தேக்கரண்டி
சாட் மசாலா - 2 சிட்டிகை
பிரிஞ்சி இலை - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 தேக்கரண்டி


 

குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை தனித்தனியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். சன்னாவை ஊற வைத்து உப்பு சேர்த்து வேக வைத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரிஞ்சி இலை போட்டு தாளித்து அரைத்த வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும்.
பிறகு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கி தக்காளி விழுது சேர்த்து சுருள வதக்கவும்.
இந்த கலவையுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள குடைமிளகாயை சேர்த்து 3 நிமிடம் வதக்கி விட்டு சாட் மசாலா தவிர்த்து எல்லா தூள் வகைகளையும் சேர்க்கவும்.
5 நிமிடம் வதக்கி வேக வைத்த கடலையை சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு மூடி வைத்து 8 நிமிடம் வேக விடவும். (கடலையில் உப்பு சேர்த்து வேக வைத்திருப்பதால் குறைவாகவே சேர்க்கவும்)
கலவை நன்கு கொதித்து கெட்டியாகும் வரை திறந்து வைத்து வேக விடவும்.
சாட் மசாலா கொத்தமல்லித் தூவி பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இது உங்க முதல் கிச்சன் குயின் நினைக்கிறேன். வாழ்த்துக்கள். எல்லா குறீப்பும் அருமை

Be simple be sample

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கும், குறிப்பினை வழங்கிய லாவண்யா அவர்களுக்கும் மிக்க நன்றி.

இதுவும் கடந்து போகும்

மிக்க நன்றி ரேவதி. ஆமாம் பா என் முதல் குறிப்பு தான்.

இதுவும் கடந்து போகும்

வாழ்த்துக்கள் கிச்சன் குயின். படங்கள் எல்லாமே அழகா வந்திருக்குது. முதல் முறை போலவே இல்ல‌.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!