kulanthai motion problem- Imma amma & vani akka pls reply me

என் 1.5 years குழ்ந்தை கு 1 மாதமாக‌ மலசிக்கல் பிரச்சனஐ உல்லது.doctor ரிடம் காட்டுனொம்.அவர் baby நின்ரு கொன்டு மலம் கலித்தால் இப்படி தான் இருக்கும் என்ரார்..குழ்ந்தை நின்ரு கொன்டு தான் மலம் கலிக்கிரான். doctor ninru kondu motion irunthal treatment ye panna mudiyathu ukkara vainga nu soltraru.but adithalum ukkara mattunguthu kulanthai.Enna seivathu plas help me..Imma and vani akka pls reply me

முதல்ல ஒரு ரெக்வஸ்ட்... பெயரிட்டு கேள்வியை குறிப்பிட்ட தோழிகளுக்கு வைக்காதீங்க... இதனால் பதில் தெரிந்த மற்றவர்கள் பதிவிட யோசிப்பாங்க. :) வேறொன்றும் இல்லை.

என் குழந்தைக்கும் இந்த பிரெச்சனை இருந்தது. மருத்துவர் சொன்னது... சர்க்கரை கலந்த வெது வெதப்பான நீர். நான் சிறிது காலம்... குறைந்தது இரண்டு வாரம், தினம் இரவில் இந்த சர்க்கரை நீரை வெது வெதுப்பாக குடிக்க கொடுத்தேன். இதனால் காலை எழுந்ததும் மோஷன் பிரெச்சனை இல்லாமல் போனது. அது பழக்கத்துக்கு வந்து விட்டால் பின வழக்கமாக அதே நேரம் போக துவங்கிவிடுவார்கள்.

நின்று கொண்டு போவது... அவசியம் ஒரு குட்டீஸ் டாய்லட் சீட்டாவது வாங்கி பழக்கப்படுத்துங்க. நீங்களும் அருகில் இருந்தால் ஆரம்பத்தில் பயப்படாமல் இருப்பார்கள். சில பிள்ளைகளுக்கு பயத்திலேயே மோஷன் வராது, ஆரம்பத்தில். பழகும் வரை கஷ்டம், ஆனால் பழகிவிட்டால் தொல்லை விடும். முதல்ல நமக்கு எப்படிடா என்று மலைப்பா தான் இருக்கும், ஆனால் சட்டுன்னு பழகிடுவாங்க, பயப்படாம துவங்குங்க.

கூடவே குழந்தையின் உணவை கவனிங்க... என்ன கொடுக்கறீங்க?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

First sorry to mention name. thanks vani akka.toilet sheet vangi train pantren inimel.payan daily nanga sapuruda food like rice,sambar,rasam,idly and banana sapiduran.biscuit stop panniten. madulam juice,papaya juice sapiduvan.water um neraya kudipan.irundhalum intha proble iruku

சாரி எல்லாம் வேண்டாம், குறிப்பிட்ட சிலர் பெயரை போட்ட மற்றவர் வர தயங்குவாங்க, அதுக்காக தான் அப்படி வேண்டாம் என்றோம்.

சாபாடு நார்மல் தான். பிரெச்சனை இல்லை. சிலர் காய்ந்த திராட்சை நீரில் ஊற வைத்து கொடுப்பாங்க. ஆனால் எனக்கு அதெல்லாம் உதவவில்லை. பிஸ்கட், ப்ரெட் கம்மி பண்ணுங்க. இரவில் வாழைப்பழம் கொடுங்க. ஃப்ரூட்ஸ் ஜூஸாக கொடுப்பதை விட அப்படியே பழமாக கொடுத்தால் நல்லது. பருப்பும், கீரையும் தினம் உணவில் சேருங்கள்.

சீட் வாங்கி ரெகுலர் வெஸ்டன் டாய்லட்டில் பொருத்தி பழக்குங்க. இது ரொம்ப ஈசியா இருக்கும். பக்கத்தில் பிடித்துக்கொள்ள எதாவது இருக்கிறதா பாருங்கள். இல்லை என்றால் நீங்கள் அருகில் உட்கார்ந்து கைகளை பிடித்து கொண்டு அவர்களிடம் பேச்சு கொடுங்கள். குட்டீஸ் சீட் போட்டாலே விழுந்து விடுவோம் என்ற பயம் குறைந்து விடும். அது வசதியாக இருக்கும்.

பழக்கும் போது முதல் நாள் உட்கார்ந்தாலே பாராட்டுங்கள். பின் பிரெச்சனை இல்லாமல் மோஷன் போக துவங்கினால் கை தட்டி பாராட்டுங்கள். பெரிய சாதனை படைத்த உணர்வு வரும் அவர்களுக்கு ;) அனுபவம். அந்த பாராட்டுக்காகவே அடுத்த நாள் போவார்கள். பழகிவிடும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வேண்டாமே. :-) இதனால் நஷ்டம் உங்களுக்குத்தான். 1. என் கண்ணில் படாமல் போக நிறைய சான்ஸ் இருக்கு. 2. எனக்குப் பதில் தெரியாட்டா!! மீதிப் பேரும் சொல்ல மாட்டாங்க.

நான் சொல்ல நினைத்த எல்லாமே வனி சொல்லிட்டாங்க, பெயர் குறிப்பிட்டு த்ரெட், கேள்வி போடுவது உட்பட. நன்றி வனி.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்