தோழி

நான் மன்றத்திற்கு புதுசு. தோழிகளே, எனக்கு உதவி செய்யுங்கள். நான் மிகவும் வேதனைபடுகிறேன். மருத்துவர் ஹோமியோபதி மருந்து கொடுததார். ஆனாலும் பீரியட் வரவில்லை.

நேற்றே இது விஷயமாக இழை பார்த்த நியாபகம்... நீங்க தான் போடிருந்தீங்களோ? குழந்தைக்காக காத்திருக்கிறீர்களா? ஆனா டெஸ்ட் ரிசல்ட் நெகடிவ் என்று சொல்லி இருந்ததாக நினைவு... சரியா? இப்ப எதுக்காக பீரியட்ஸ் ஆக மருந்து? காரணம் சொல்ல முடியுமா? ஏன் கேட்கிறேன் என்றால், இப்போதைக்கு பிள்ளை வேண்டாம் என்பவர்கள் பீரியட்ஸ் வரலன்னு டென்ஷனாவாங்க... நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணி பார்க்கலாமே என்று இருக்கிறது மனசுக்கு. ஹீமொக்லோபின் எதுவும் கம்மியா இருக்கா? அப்படி இருந்தாலோ, தைராய்ட் பிரெச்சனை இருந்தாலோ, ட்ராவல் / அதிக வேலை / தூக்கமின்மை / டென்ஷன் இப்படி காரணத்தால் கூட பீரியட்ஸ் தள்ளி போகும். உங்களுக்கு இப்படி எதாவது காரணம் இருக்கும் என்று தோன்றுகிறதா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாணி அக்கா, 50நாள் ஆகியும், ரிசல்ட் நெகடிவ். பிரீயட் வந்தால்தானே அடுத்து முயற்சி செய்யலாம். தைராய்டு பிரச்சனை உள்ளது. கருமுட்டை வளரவில்லை. இதை எப்படி சரிசெய்வது தெரியல‌.

ம்ம் புரிகிறது. ஆனால் தைராய்டுக்கு மருத்துவர் மருந்து கொடுத்திருக்காங்க தானே? அதை சரியா சாப்பிடுங்க. அது கண்ட்ரோலுக்கு வந்தா இது தானா சரியாகும். பதட்டப்படாம இருங்க, அதுவே பிரெச்சனை சரியாக வழி. கவலைபடாதீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்