தேதி: February 10, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. கவிசிவா அவர்களின் கொள்ளு துவையல் குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்துகாட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய கவிசிவா அவர்களுக்கு நன்றிகள்.
கொள்ளு - கால் கப்
தேங்காய் துருவல் - அரை கப்
மிளகாய் வற்றல் - 2
பூண்டு - ஒரு பல்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வெறும் வாணலியில் கொள்ளை சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

வறுத்த கொள்ளுடன் மீதமுள்ள எல்லாப் பொருட்களையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைக்கவும். (மையாக அரைக்க வேண்டாம்).

சுவையான கொள்ளு துவையல் தயார்.

சிறிது நெய் சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

Comments
வானி
எல்லாமே அருமையா இருக்கு. வாழ்த்துக்கள் கிட்சன் குயின்.
எல்லாம் சில காலம்.....