ஃபிரிட்ஜில் பொருட்கள் வாடாமலிருக்க

சென்னை டி நகரில் புகழ்பெற்ற சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக்கடையில், ஃபிரிட்ஜில் காய்கறி, பழங்களை வைப்பதற்கென்று நைலான் சுருக்கு பைகளை விற்பனை செய்கின்றார்கள். பல அளவுகளில் ஒரே பொதியில் போட்ட பாக்கட்டுகளாக கிடைக்கும். அவைகளைத்தான் நான் பல வருடங்களாக உபயோக படுத்தி வருகின்றேன். மிகவும் உபயோகமாக உள்ளது.அவை வேறெங்கு கிடைக்கும் என்று தெரிந்தவர்கள் கூறினால் இந்தியாவிலும் சரி, வெளிநாட்டிலும் சரி,மற்றவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.நன்றி.

Hi Manohari,

Thanks for the tip,may be next time when I go to India I can buy it,is it easy to wash the bags,What do you say,the name of the bag.Pls reply,thanks in advance.

geesam.

geesam

ஹலோ கீதா, எப்படி இருக்கின்றீர்கள்?நீங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அந்த பொதியின் பெயரை தேடி எடுத்து விட்டேன். கிட்ட தட்ட பத்து வருடங்களுக்கு முன்பு வாங்கியது. ஒரு பொதி மட்டும் பிரிக்கபடாமல் இருந்ததால் அது உங்களுக்கு பயன்படும் என்று நினைக்கும் பொழுது சந்தோசமாக உள்ளது. அதன் பெயரையும் அந்த பொதியில் வைத்திருந்த காகிதத்தில் ஆங்கிலத்தில் அச்சிட்டுள்ளதை அப்படியே எழுதுகின்றேன் பார்வையிடவும்.

NEW HYGENIC-DURABLE FRIDGE BAGS.
KEEPS FRESH YOUR FRUITS,FLOWERS AND VEGETABLES
WASHABLE : ODURLESS
3-Different Sizes. Price :Rs 9.50

இப்பொழுது நிச்சயமாக அதன் விலை மாறியிருக்கும்.நன்றி.

மனோகரி மேடம் எப்படி இருக்கீங்க?கடைகளில் ஆரஞ்சு,பூண்டு போன்றவற்றை வலை போல உள்ள பை களில் போட்டு தருகிறார்ர்களே அதில் காய்களை போட்டு பிரிஞ்சில் வைத்தால் நன்றாக இருக்குமா?

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஹலோ ரேணுகா, நீங்கள் எப்படி இருக்கீன்றீர்கள்? நான் நலமுடன் உள்ளேன், நன்றி. தாங்கள் குறிப்பிட்டுள்ள வலை போன்ற பைகள், அதில் வைக்கும் ஒரு சில பொருட்களான நீங்கள் கூறியதுப் போல் ஆரஞ்சு, பூண்டு, வெங்காயம், போன்ற பொருட்களை, வெளியில் காற்றோட்டமாக வைத்து அழூக விடாமல் அதிக நாட்களுக்கு பாதுகாக்க வேண்டி, தயாரிக்கப்பட்டவை. ஆகவே அவைகளில் காய்கறிகளை போட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் அதிக குளிரினால் காய்ந்துவிடும்,அல்லது அழூகிவிடும், ஆகவே அதை ஃபிரிட்ஜில் பயன்படுத்த இயலாது. ஆனால் நேரிடையாக வைக்கக் கூடிய ஆரஞ்சு, எலுமிச்சை, கிரேப் ஃபுரூட், போன்ற பழக்களை வைக்க மட்டும் பயன்படுத்தலாம். ஆனாலும் அதில் வைக்க அவசியமில்லை என்றே கருதுகின்றேன். நன்றி.

மேலும் சில பதிவுகள்