பேச்சுலர்ஸ் ப்ரெட் டோஸ்ட்

தேதி: February 11, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. தளிகா அவர்கள் வழங்கியுள்ள பேச்சுலர்ஸ் ப்ரெட் டோஸ்ட் குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய தளிகா அவர்களுக்கு நன்றிகள்.

 

ப்ரெட் ஸ்லைஸ் - 10
முட்டை - 3
இஞ்சி - அரை இன்ச் துண்டு
பூண்டு - 2 பல்
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 2
புதினா - 5 இலைகள் அல்லது கொத்தமல்லித் தழை - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
முட்டையை கரண்டி அல்லது பீட்டரால் நன்கு அடித்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, வெங்காயம், உப்பு, பச்சை மிளகாய், புதினா அல்லது மல்லித் தழைகளை போட்டு அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த கலவையை அடித்து வத்துள்ள முட்டையுடன் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
முட்டை கலவையில் ப்ரெட்டை இருபுறமும் தோய்த்து தோசை கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி இருபுறமும் சிவக்க சுட்டு எடுக்கவும்..
சுவையான எளிதில் செய்யக் கூடிய ப்ரெட் டோஸ்ட் ரெடி.

மிகவும் எளிதில் தயாரிக்கக்கூடிய, பயணங்களின் போது எடுத்து செல்லக்கூடிய சிறந்த உணவு இது. தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இந்த பேச்சுலர்ஸ் ப்ரெட் டோஸ்ட் குறிப்பு நல்லாருக்கு .பேச்சலர்ஸ்க்கு ரொம்ப useful aa இருக்கும் .
Nice dish.

வாழ்த்துக்கள் கிச்சன் குயின்.

நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..

அன்புடன்
Sheela

வருகைக்கும் வாழ்த்திற்க்கும் எனது நன்றிகள்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

குறிப்பினை வழங்கிய‌ தளிகாவிற்க்கும் வெளியிட்ட‌ குழுவினருக்கும் எனது நன்றிகள்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....