மிர்ச்சி பூரி

தேதி: February 11, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ஜவகர் பானு அவர்களின் மிர்ச்சி பூரி என்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ஜவகர் பானு அவர்களுக்கு நன்றிகள்.

 

ஆட்டா மாவு - 400 கிராம்
மைதா - 100 கிராம்
மிளகாய்த் தூள் - ஒரு மேசைக்கரண்டி
சீரகம் - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 2 1/2 கோப்பை
பொரிப்பதற்கு:
எண்ணெய் - தேவையான அளவு


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் கலந்து நன்றாக பிசைந்து அரைமணி நேரம் அப்படியே வைத்திருக்கவும்.
தயார் செய்து வைத்திருக்கும் மாவை பூரி செய்ய தேவையான அளவில் உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
உருண்டைகளை சப்பாத்திக் கல்லில் வைத்து பூரிகளாக தேய்க்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேய்த்த பூரிகளை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.
சில நிமிடங்களில் சீரக மணத்துடன் மிர்ச்சி பூரி தயார்.

மிளகாய் தூளிற்குப் பதில் மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம். இதை சப்பாத்தியாகவும் சுடலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அப்பாடா... எவ்வளவு நாளாச்சு முகப்பில் சுமியை கண்டு :) மகிழ்ச்சி. பூரி சூப்பர் சுமி, ட்ரை பண்ணிடுவோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப‌ நன்றி வனி..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

குறிப்பினை வெளியிட்ட‌ டீமிற்க்கும் குறீப்பினை வழங்கிய‌ திருமதி. ஜவகர் பானு அவர்களுக்கும் எனது நன்றிகள்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

வாழ்த்துக்கள் சுமி . நம்ம ஐயிட்டம் செம கலக்கல்.

Be simple be sample

பதிவுக்கும் பாராட்டுக்கும் நன்றிகள் ரேவ்ஸ்..:)
// நம்ம ஐயிட்டம் செம கலக்கல்.// செய்துட்டு போட்டோ போடனும் சரியா ரேவ்ஸ்..:) ;)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

எளிமை & சூப்பர். வாழ்த்துக்கள் கிச்சன் குயின்.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

மிர்ச்சி பூரி செம்ம ஹாட் மச்சி.. கடைசி படத்திலுள்ள இரண்டு பூரியும் அபேஸ்.. அருமை அம்மிணி.. கலக்குங்க..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

உங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப‌ நன்றி.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....