தால் மக்கானி

தேதி: February 12, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ஜெயந்தி அவர்களின் தால் மக்கானி குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ஜெயந்தி அவர்களுக்கு நன்றிகள்.

 

முழு உளுந்து - கால் கப் (தோலுடன்)
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - பாதி விரல் அளவு
பூண்டு - 7
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
பட்டை - ஒரு துண்டு
சோம்பு - அரை தேக்கரண்டி
கிராம்பு - 4
வெண்ணெய் - அரை மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் -அரை மேசைக்கரண்டி


 

உளுந்தைக் கழுவி 6 மணி நேரம் ஊற வைக்கவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, சோம்பு, கிராம்பு தாளித்து இஞ்சி, பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் உளுந்து மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்
அதில் தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி 2 கப் தண்ணீர் ஊற்றி 4 முதல் 6 விசில் வரும் வரை வேக வைத்து இறக்கவும். தேவையெனில் மசித்து விடவும்.
சுவையான தால் மக்கானி தயார். வெண்ணெய் சேர்த்து பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

good information here