ப்ரெட் பீஸ் மசாலா

தேதி: February 13, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சையத் கதீஜா அவர்களின் ப்ரெட் பீட் மசாலா குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய கதீஜா அவர்களுக்கு நன்றிகள்.

 

ப்ரெட் - 6
பச்சை பட்டாணி - 250 கிராம்
தக்காளி - 250 கிராம்
பெரிய வெங்காயம் - 250 கிராம்
பச்சை மிளகாய் - 6
எலுமிச்சை சாறு - 2 மேசைக்கரண்டி
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
நெய் - 2 தேக்கரண்டி
கசகசா - ஒரு மேசைக்கரண்டி
ஏலக்காய் - 2
கிராம்பு - 2
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 6 பல்


 

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மூன்றையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
கசகசா, ஏலம், கிராம்பு, இஞ்சி, பூண்டு இவற்றை அரைத்து வைக்கவும்.
வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
தக்காளி குழைவாக வதங்கியதும் பட்டாணி, அரைத்த மசாலா விழுது மற்றும் உப்பு சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி இறக்கி வைக்கவும். அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்துவிடவும்.
ஒரு ப்ரெட்டின் மீது இந்த கலவையை வைத்து அதன் மேல் நறுக்கிய கொத்தமல்லித் தழை (அ) புதினா இலைகளை தூவி வட்டமாக நறுக்கிய வெங்காயத்தை வைத்து மேலே மற்றொரு ப்ரெட்டை வைத்து மூடவும்.
சுவையான ப்ரெட் பீஸ் மசாலா ரெடி


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கலக்கலா இருக்கு. பயங்கரமா ஆர்ட் வரைவீங்க‌ போல‌. பொம்மை ரொம்ப‌ நல்லா இருக்கு. ஒரு பொட்டு வைத்து இருக்கலாம்.

எல்லாம் சில‌ காலம்.....