பெங்களூர் சிக்கன்

தேதி: February 13, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. கே. எஸ். நித்தியா அவர்களின் பெங்களூர் சிக்கன் என்கின்ற குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய நித்தியா அவர்களுக்கு நன்றிகள்.

 

சிக்கன் - அரை கிலோ
முட்டை - 3
மைதா - 250 கிராம்
பெரிய வெங்காயம் - 200 கிராம்
பச்சை மிளகாய் - 3
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி விழுது - அரை தேக்கரண்டி
பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
தயிர் - 2 தேக்கரண்டி
எலுமிச்சை - அரை மூடி
பட்டை - சிறிது
கிராம்பு - 5 கிராம்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
சிவப்பு கலர் பவுடர் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு


 

சிக்கனைத் துண்டுகளாக வெட்டி கழுவி சுத்தம் செய்து அதில் மைதா சேர்த்து பிரட்டி வைக்கவும். வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.
சிக்கனுடன் முட்டையை உடைத்து ஊற்றி நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பிரட்டவும்.
அதன் பிறகு பட்டை மற்றும் கிராம்பை பொடி செய்து சிக்கனுடன் சேர்த்து கலர் பவுடர், உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து நன்றாகப் பிசையவும். சிறிது கூட தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியமில்லை.
எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து பிசைந்த இக்கலவையை சுமார் 15 - 25 நிமிடங்கள் வரை ஊற விடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் ஊற வைத்த சிக்கன் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சுவையான பெங்களூர் சிக்கன் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எல்லாமே அருமை. வாழ்த்துக்கள்.

எல்லாம் சில‌ காலம்.....

ஒரே சிக்கன் மயமா இருக்கு ஹ்ம்ம் கலக்குங்க ;)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.