மாமியாருக்கு ஒரு சேதி மருமகளுக்கு ஒரு சேதி

அன்புத் தோழிகளுக்கு,

மேலே கொடுத்திருக்கும் தலைப்பு - ஒரு பழைய பாடலின் ஆரம்ப வரி

”மாமியாளுக்கு ஒரு சேதி
இதை மதிச்சு நடந்தா மரியாதி

மருமகள் தன்னை பெருமைகளுடனே
வாழ வைப்பது புது நீதி

மருமகளெல்லாம் எருமைகளா
அந்த மாமியாருக்கு அடிமைகளா

அத வயசானவங்க புரிஞ்சுக்கணும்
நம்ம வாலிப மனச தெரிஞ்சுக்கணும்

பழசா போன பாத்திரமெல்லாம்
பரணையின் மேலே ஒதுங்கிக்கணும்

கிட்டத்தில் நின்னா சிரிச்சா என்று
கேள்வி கேட்க கூடாது

தட்டி மறைவில் காதை கொடுத்து
ஒட்டு கேட்க கூடாது

ஊதுவத்திய பொருத்தும் போது
உஸ்ஸுன்னு பெருமூச்சாகாது

பஞ்சண மெத்தைய விரிக்கும் போது
பக்குன்னு இரும கூடாது

சாவியை மருமகள் கையில் கொடுத்து
ஜப மாலை தன்னை எடுத்துக்கணும்”

சாமி பக்கணும் கோவில் போகணும்
நம்ம சந்தோஷத்துக்கு
டைம் கொடுக்கணும் கொடுக்கணும்”

இவை அந்தப் பாடலின் சில வரிகள்.

மருமகள்களோட எதிர்பார்ப்புகளில் முக்கியமானவை எல்லாம் இந்த வரிகளில் தெரிகின்றனதானே.

\\மருமகள் - மறுமகள்.//
அது சரி, மருமகளை மாட்டுப் பெண் எனவும் அழைக்கிறார்களே அதற்க்கு பொருள் என்ன ? :(

நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள பாடல் வரிகளுக்கு வீட்டுக்காரர் (??) அதாங்க சொந்தக்காரர் யார் ? அநியாயத்துக்கு அனுபவிச்சுப் பாடியிருக்கார்ப்பா :),
இதே போன்று மாமியார்களுக்கென்று யாருமே பாடல் எழுதவில்லையா? :( (எக்கோ மிஸ்ஸிங்):))

அன்பு வாணி,

மகளுக்கு மாற்றாக வந்த பெண் என்பது - மாற்றுப் பெண் என்பதுதான் மாட்டுப் பெண் என்பதாக மருவியதுன்னு படிச்சிருக்கேன். அதெல்லாம் இல்ல, இந்த வீட்டுக்கு மாடு மாதிரி உழைக்கத்தான் அனுப்பி வைச்சிருக்காங்கன்னு மாட்டுப் பெண்கள் புலம்பியதும் உண்டு.

மாமியாருக்கு சேதி சொல்லும் பாடல் இடம் பெற்ற படம் - பனித்திரை. கவிஞர் கண்ணதாசனின் வரிகளை கே.வி.மகாதேவன் இசையில் சீர்காழி கோவிந்தராஜனும் லீலாவும் பாடியிருக்காங்க. லிங்க் ஃபேஸ்புக்ல ஷேர் பண்ணியிருக்கேன்.

உங்க முந்தின பதிவைப் பற்றிய கருத்துக்களை இன்று மாலைக்குள் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

மாமியாருக்கு யாரும் எழுதலையான்னு நீங்க கேட்டிருந்ததைப் படிச்சதும் ஒரு பாடல் எழுத(விபரீத) ஆசை வந்துடுச்சு:):) எழுதிட்டேன். ச்ச்ச்சும்மா தமாஷுக்கு. பாட்டு படிச்சுட்டு யாரும் டென்ஷன் ஆகிடாதீங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

டியர் சீதாம்மா,எத்தனை மாற்றங்கள் இருந்தாலும் இத்தலைப்பு விவாதத்திற்கு
ஏற்றது மற்றும் சில விஷயங்களை சரி பண்ண‌, புரிதல் தருகிறது.விடுமுறை என்பதால் கணணி பிள்ளைகள் கையில்.உடனே மன்றத்திற்க்கு வரஇயலவில்லை
அக்காலத்தில்:‍= ஆணோ,பெண்ணோ,நான்கைந்து உடன்பிறப்புகள்(பாசம்).கூட்டு குடும்பம்(பெரியோர் சொல் கேட்பது,சார்ந்திருப்பது) அவ்வளவாக‌ படிக்காதது(எதிலும் தலையிடாமல் இருப்பது).உடுத்தும் துணி(மற்றவரை நெருடாத‌ கட்டுப்பாடு).தரமான‌ படங்கள்(நெறி தவறாமை) முக்கியமாக‌ மின்,மென் சாதனங்கள் இல்லை.அதிகப்படியான‌ தேவைகள் இல்லை.பொருளாதார பிரச்சனை இல்லை("ப்பா!"எத்தனை இல்லை")
இக்காலத்தில்:= உடன் பிறப்பு 1 (அ) இல்லாமலிருப்பது,(பாசம் குறைந்திருப்பது(அ)எதிர்பார்காதது).மெத்த படிப்பு(அதிகமாக‌ யோசிக்கும் திறன்)
வேலை செல்வதால் (தனிகுடித்தனமானால் வீட்டில் ஓய்வு) கணிணி,கைபேசி,
மாடர்ன் உடைகள், அயல்நாட்டு உணவகங்கள்,பொருட்களின் விலை ஏற்றம்,விரசமான‌ சினிமாக்கள்,அதிகமான‌ வருமானம் இவையெல்லாம் தனித்து விடபட்டாலும் வாழ‌ துணை புரிகின்றன‌.உடனடி சந்தோஷ‌ம் கிடைகிறது.கட்டுபாடுகள் பிடிக்கவில்லை.இதில் சட்ட‌ மாற்றங்கள் துணை வேறு!மகள் வாழ்க்கையில் அலசி ஆராயும் பெரியவர்கள் மகன் விஷயத்தில்
நமக்கேன் வம்பு, நன்றாக‌ இருந்தால் சரி என விலகி கொள்கின்றனர்.சிலர் பொறுத்துக்கொண்டு வாழ்கிறார்கள்,எனக்கு தெரிந்த‌ தோழி தன் ஒரே பையனுக்கு, பெண் பார்க்க‌ சென்ற‌ போது,பெண் வேலைக்கு சென்றிருந்தாளாம்.அரை மணி நேர‌ காத்திருந்தபின் வந்த‌ அப்பெண் கேட்ட‌ முதல் கேள்வி ப்ளாட் இருக்கா?உடன்பிறப்பு இல்லைதானே?அப்புறம் அம்மாவை ஹோமில் சேர்த்துவிட‌ சம்மதமானால் எனக்கும் முழு சம்மதம் என்றாளாம்.
கண்ணீர் விட்டு கூறியபோது மனம் கனத்தது.யாரையும் குற்றம் சொல்லி பயனும் இல்லை.பெற்றவர்களும் கால‌ மாற்றங்களுக்கேற்ப‌ அட்ஜஸ்ட் பண்ணி போக‌ வேண்டும்போல் உள்ளது.நிச்சயமாக‌ நான் இந்த‌ ரகம்தான்.Fix ஆயிட்டேன்.மௌனமாக‌ இருந்தாலாவது உடல் உபாதைகள் சிறிது குறையும்.
"fix ஆனதனால நான் க்ரேட் எஸ்கேப் ப்பா"
(நினைப்பது வேறு! யதார்த்தம் என்பது வேறு! என்று யாரோ சொல்வது கேட்கிறது) வாழ்க்கை என்றால் போராட்டம் தான்!
"அன்புடன் மாலினிமாமி"

ச்சும்மா தமாஷ் - இந்தப் பாட்டுக்கு பதில் பாட்டு எழுதுங்கப்பா, ரசிக்கலாம்:):):)

மருமகளுக்கு ஒரு சேதி இதை மதிச்சு நடத்தல் சம நீதி
மாமியார் தன்னுடன் அனுசரித்து நடத்தல் பொது நீதி

மாமியார் எல்லாம் சுமைதாங்கிகளா
அந்த மருமகள் கோபத்துகெல்லாம் வடிகால்களா

அதை இளவட்டங்கள் புரிஞ்சுக்கணும்
எங்க வயதின் பெருமையை தெரிஞ்சுக்கணும்

பழசானாலும் அனுபவமென்னும்
தங்கத்துக்கு உரிமையைக் கொடுத்து நடக்கணும்

எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தும் உரிமையை
அன்போட பண்போட மதிக்கணும்

தட்டி மறைவில் ஒட்டுக் கேட்க வாய்ப்பெதுக்கு
எட்டெடுத்து வைக்கும்போது ஆசி கேட்டால் சுகமிருக்கு

உஸ்ஸுன்னு எழும் பெருமூச்சு உங்க ஊதுபத்திக்க்குன்னு குத்தம் எதுக்கு
அது வயசானா வரும் மூச்சுப்பிடிப்பு, மருந்து வாங்கித் தாங்க அதுக்கு

பஞ்சணை மெத்தைய விரிக்குமுன்னே பக்குன்னு இருமல் கேக்குமுன்னே
பக்குவமா இருந்து இருமலுக்கு மருந்து எடுத்துக் கொடுத்தால் சுகம்தானே

மாமியார் கையில் இருப்பது பழையதொரு சாவி
அந்த பீரோவில் இருப்பதெல்லாம் பழசாகிப் போன காவி

கணவனின் க்ரெடிட் கார்டும் டெபிட் கார்டும் மட்டும்தான் அவர் பையில
ஆன்லைன் ஷாப்பிங் நெட் பாங்கிங் பாஸ்வேர்டு எல்லாம் உங்க கையில

சாமி பாக்க கோவில் பாக்கவும் செலவாகும் முழங்கால் வலிக்கும்
ஹாலில ஒரு டிவி நூறு சானல் பக்தி சானலோட அமைதி கிடைக்கும்.

போதும்ம்மா போதும் ஏனிந்த போட்டி
என் பேரக்குழந்தைகளுக்கு நான் என்றும் இனிய பாட்டி

மனசெல்லாம் சந்தோஷம் தரும் அவங்க லூட்டி
இனி எல்லாம் சுகமே என்று சொல்லும் நமது நாள்காட்டி.

அன்புடன்

சீதாலஷ்மி

///ஆனால் மருமக்கள் சந்தோஷமாக இல்லாவிட்டால் பிள்ளைகளின் சந்தோஷமும் கெட்டுப் போய்விடும் என்பதைச் சிந்திக்க மட்டும் சிலர் மறுப்பது ஏன் //// .இமாம்மா ரொம்ப அருமையான வரிகள் ஒவ்வொரு மாமியாரும் நினைத்து இருந்தால் பிரச்சினைகளுக்கு வழி இலலை ம்மா...மருமக்கள் மனதில் நல்ல இடத்தை பிடிப்பிங்கம்மா அதில் சந்தேகமே இல்லை...

அன்பு தோழி. தேவி

///பிசாசு போல மாமியாருக்கு அடங்கி ஒடுங்கிய மருமகள் ////.இந்த நிலைதான் வனி அக்கா என் வாழ்க்கை. நானும் எப்படிலாம் மாமியார் வேணும்னு ஆசைப்பட்டேனோ அந்த மாதிரி என் மருமக்களிடம் இருப்பேன். என்னைய பார்த்து எனக்கு பின் வரும் தலைமுறை மாமியார் மருமகள்கள் இருப்பாங்க...

தன்னுடைய மகள் புகுந்த வீட்டில் எப்படிலாம் இருக்கனும்னு ஆசைப்படுறாங்களோ அதை மாதிரி மருமகளையும் வச்சுக்கிட்ட
சண்டையும் வராது வீட்டில் ஆண்களும் நிம்மதியாக இருப்பாங்க. ..

கணவன் மனைவி மட்டும் விட்டுக்கொடுப்பது போல் மாமியார் மருமகள் களும் விட்டுக்கொடுக்கலாம்...

அன்பு தோழி. தேவி

ஆஹா... எசப்பாட்டு ரொம்ப‌ அருமை.
ஒவ்வொரு வரியும் சிந்திக்க‌ வைக்குது சீதா.

எதையும் பாசிட்டிவா எடுத்துக்கணும்னு நினைப்பு வருது. இன்னும் பேசுவோம். நாளைக்கு வரேன்.

தோழிகளே எத்தனை மாமியார்௧ள் தனது மருமகளை மகளாக நினைத்தது இருக்கிறார்௧ள்?
எத்தனை மருமகள் தனது மாமியாரை அம்மாவா௧ நினைத்து இருக்கிறார்௧ள்?

மாமியார் மருமகள் உறவு நிலை அம்மா மகள் உறவு நிலைக்கு மாறினாலும் கூட எத்தனை நாட்௧ள் நீடிக்கும் என்று கூறுங்௧ளேன் தோழி௧ளே ?

3,,மாமியார்௧ளாகிய அவர்௧ள் தான் பெற்ற ம௧ளை தான் மகளா௧ நினைப்பார்௧ளே தவிர மருமகளை ஒரு போதும் மகளா௧ நினைக்௧ மாட்டார்௧ள் நான் என்ன கூற நினைக்கிறேன் என்றால் மருமகளை மருமகளாகவே நடத்துங்௧ள்
ஆனால் மாமியார் ஆகிய நீங்௧ள் அவர்௧ளுக்கு வழி காட்டியாக இருங்௧ள்

4,,மரும௧ள் செய்யும் தவறினை நீங்௧ள் சரியா௧ செய்ய அறிவுரை கூறுங்௧ள் அது அவர்௧ளுக்கு பிடிக்௧வில்லை என்று தெரிந்தால அறிவுரை கூறாதீர்௧ள்
ஒரு முறை கூறலாம் இருமுறை கூறலாம் அடிக்௧டி நீங்௧ள் அவர்௧ள் தவறினை குறை கூறி கொண்டு இருக்காதிர்௧ள்
உங்௧ளின் மீது அவர்௧ளுக்கு இவங்௧ எப்போதுமே இப்படி தான் எதையாவது சொல்லிக்கிட்டே இருப்பாங்௧ண்ணு சொல்லுவார்௧ள்
அவர்௧ள் மாமியார் சொன்னா சரியா இருக்கும் அவங்௧ கிட்ட அறிவுறை கேட்௧லாம் என்று நினைக்கும் அளவிற்கு நடந்து கொள்ளுங்௧ள்

5,,, மருமகளின் சுதந்திரத்தில் தலையிடாதீர்௧ள்
தேவையில்லாமல் நீங்௧ள் அவர்௧ளது சுதந்திரத்தில் தலையிட்டால் வீண்விவாதங்௧ள் வர கூடும்
உ,தா::: குழந்தை வளர்ப்பு,,, வேலைக்கு செல்ல நினைக்கும் போது

6,,, மரும௧ளின் குடும்பத்தை தவறா௧ பேசுவது ,,,எதாவது ஒரு சின்ன பிரச்சனையா௧ இருந்தாலும் கூட ஊர் உல௧த்தில் இல்லாத பொண்ணா உன்னை போய் என் பையனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டேனு பேசுவது இது போல் நீங்௧ள் பேசுவதை தவிர்த்து விடுங்௧ள்

7,,, சில ஭மரும௧ள்௧ளை என்னதான் மாமியார் அனுசரித்து சென்றாலும் சில மருமகள் போடும் சண்டையோ அதற்குமேல்

8,,, மரும௧ளை குடும்பத்தை விருத்தி அடைய செய்ய வந்திருக்கும் மகாலெஷ்மி ஆகவும் குடும்பப்பொறுப்பை பேணிகாக்௧ வந்திருக்கும் ஒளிவிளக்கா௧வும் நினையுங்௧ள்

9,, மருமகளை கஷ்டத்தில் கண்ணிர் சிந்த வைப்பதை விட
புன்னகையில் நனைய வையுங்௧ள்
வாழ்க்கை சந்தோஷமாக அமையும்

10,,மருமகள்களே மாமியாருடன் சண்டை போடுவதன் மூலம் தான் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று நினைத்தால் அது தவறு

11,,, மாமியாருடன் முடிந்த வரையில் மௌனத்தை கடைபிடியுங்௧ள்

12,,, பிரச்சனை௧ள் ௧ண்டு அஞ்ஞாமல் துணிந்து நின்று செயல்படுங்௧ள்

ML

பார்த்து ரொம்ப நாள் ஆகுது :) நலமாக இருக்கீங்களாம்மா? நல்ல தலைப்பு, நிறைய தோழிகள் அழகாக கருத்தை சொல்லி இருக்காங்க. மாமியார் மருமகள் உறவு ஒருவர் விட்டுக்கொடுத்து போவதால் மட்டுமே வருவதில்லை. இங்கே தோழிகள் சொன்ன மாதிரி இரு கை தட்டினால் தான் ஓசை. சீதாம்மா என்னை கட்டிக்கொடுத்தப்போ “உன் வாயாடி வேலை எல்லாம் அங்க காட்டாத, எல்லாத்தையும் பொருத்து போகணும், அன்பா நடந்துக்கணும், வீட்டு வேலை எல்லாம் கத்துக்கணும், எதிர்த்து பேச கூடாது, எங்களுக்கு கெட்ட பேர் வாங்கி தரக்கூடாது” இப்படி எல்லாம் சொல்லித்தாம்மா அனுப்பினாங்க. நானும் ஆரம்பத்தில் இதை எல்லாம் மனசுல வெச்சுகிட்டு படுத்தின பாட்டுக்கெல்லாம் சத்தமில்லாம அழுதனே தவிர யாரையும் ஒரு வார்த்தை எதிர்த்து பேசினதில்லைம்மா. என்கிட்டயே என் தாயாரை அவள் இவள் என்று மரியாதை இல்லாமல் திட்டியபோது துடித்திருக்கிறேன். இதையே என் பெற்றோர் அவர்கள் பிள்ளையிடம் பேசி இருந்தால் விட்டிருப்பார்களா? பெண்ணை பெற்றவர்கள் அத்தனை பாவ ஆத்மாக்களா? தன் பெண்ணின் புகுந்த வீட்டை மதிக்காத என் மாமியார் தன் மருமகள் தன் வீட்டையும் விட்டில் உள்ள உறவுகளையும் விழுந்து வணங்க வேண்டும் என்று எதிர் பார்ப்பது நியாயமா? என்னை பிறந்த வீட்டுக்கு அழைக்க வந்த என் பெற்றோரை (திருமணம் ஆன 1 வாரத்தில்) வாங்க என்று அழைக்க கூட அங்கே ஆளில்லாமல் போனது. எல்லாவற்றையும் பொருமையாக தான் பார்த்திருந்தேன், சில வருடம் முன் வரை. இப்போது அப்படி அல்லம்மா... சில நேரம் நம் நேசத்துக்கு அருகதை இல்லாதவர்கள் என்பது புரிந்து போனால் தூக்கி வீசத்தான் வேண்டி இருக்கிறது. இங்கே ஒரு தோழி சொன்னது போல அம்மா என ஆரம்பித்த உறவு தான், இன்று அத்தை என்பதை கூட குறைத்து “ம், சொல்லுங்க, வாங்க, போங்க” என்று நிற்கிறது. தன் பெண்ணுக்கு பெண் பிள்ளை பிறந்தால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் என் மாமியார், எனக்கு ஆண் பிள்ளை தான் பிறக்க வேண்டும் என்றது ஏனம்மா? இதிலெல்லாமா ஒருவர் மூக்கை நுழைப்பது? திருமணம் ஆன அடுத்த மாதமே “இந்த மாசம் முழுகிட்டியா? எங்க வீட்டில் எல்லாருக்கும் உடனே குழந்தை நின்னுடுமே” என்றால் புதிதாக வந்த பெண்ணுக்கு கூசிப்போகாதா? மாதா மாதம் தலைக்கு குளித்துவிட்டு வரும் மருமகளை குற்றவாளி கூண்டில் நிருத்தும் மாமியார்கள் எத்தனை பேர் தெரியுமா? ஏனம்மா? இந்த நிலை அவர் பெண்ணுக்கு ஏற்பட்டால் இப்படி தான் நடந்து கொள்வார்களா? அப்போது அன்பாக பாத்திருப்பார்கள் தானே? மருமகள் என்றால் இவை எல்லாம் எழுதப்படாத சட்டமா? தான் எப்போது பிள்ளை பெற வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை கூட தராமலிருக்க ஏன் திருமணம் செய்து வைக்க வேண்டும்? என் பெண்ணின் நகையை அங்கே எடுத்துவிட ஆளிருக்க கூடாது என்று பெற்றோர் கேட்டதாக சொன்னீர்களே சீதாம்மா, எத்தனை பெண்கள் புகுந்த வீட்டில் அவர்கள் பெண்ணின் திருமணத்துக்கும், கணவரின் உடன் பிறப்புகளை கரையேத்தவும் தன் நகைகளை இழந்திருக்கிறார்கள்? தன் நகையை மாமியாரிடம் கொடுத்து வைத்திருந்து எங்கு போகவும் ஒரு சங்கிலிக்கு மாமியார் தருவார்களா என்று எதிர் பார்க்கும் மருமகள்கள் எனக்கு தெரியும்மா. மருமகள் பெற்ற பிள்ளைகளை வளர்க்க, மருமகளுக்கு பிரசவம் பார்க்க அவளது பிறந்த வீட்டார் வேண்டும். விஷேஷம், நல்லதுன்னா சீர் செய்ய பெண்ணை பெற்றவர்கள் வேண்டும். ஆனால் பேரப்பிள்ளைகள் லீவுக்கு இவர்களை தான் பார்க்க வர வேண்டும், தாய் வீட்டுக்கு அனுமதியில்லை. என்னம்மா நியாயம்? இங்கே ஒத்தாசுக்கு ஆளின்றி தனியே பிள்ளைகளை வளர்ப்போம், மாமியார் விட்டுக்கு போனா இரண்டு நாள் சோரு போட ஆளிருக்காது, நாங்க போறப்போ அவங்க ஓய்வு எடுப்பாங்க, நாங்க தடபுடலா விருந்து சமைப்போம். நாங்களும் பெண் தானம்மா. உடம்பு வலி, தலை வலி என்றால் நடிப்பு என்று எங்கள் முன்னாடியே சொன்னால் துடிக்கத்தான் செய்யும். நான் நல்ல மாமியார்களை பார்த்திருக்கிறேன், பழகியும் இருக்கிறேன். அட நமக்கு இப்படி ஒரு மாமியார் கொடுத்துவைக்கவில்லையே என்று ஏங்கியும் இருக்கிறேன். இப்போதும் பிறந்த வீட்டு மக்கள் விட்டுக்கொடுத்து போ என்ற ஒரு வார்த்தைக்கு தானம்மா பொருத்து போகிறேன். எல்லா பிறந்த வீட்டிலும் கெட்டதை சொல்லி அனுப்புவதில்லை, அதே போல எல்லா புகுந்த வீட்டிலும் நல்லதை மட்டுமே செய்வதும் இல்லை. இங்கே பிள்ளை வரத்துக்காக காத்திருக்கும் தோழிகளை கேளுங்கள், உண்மையில் பிள்ளை வேண்டும் என்று அவர்கள் ஆசையை விட சுற்றி இருக்கும் புகுந்த வீட்டு உறவுகளின் பார்வைக்கும் பேச்சுக்கும் பயந்தே மருத்துவரை நாடி திருமணம் ஆன 2 மாதத்தில் ஓடி இருப்பார்கள். நல்ல மாமியாரே இல்லை எனவில்லை, எல்லா மருமகளும் நல்லவர் என்றும் சொல்லவில்லை. எத்தனுக்கும் எத்தன் வையகத்தில் உண்டு. அன்பையும் அமைதியையும் ஒருவரே கடை பிடித்தால் விரைவில் மனநல மருத்துவரிடம் போய் அந்த ஒருவர் நிற்க வேண்டி இருக்கும். ஆடுற மாடை ஆடித்தான்... மிச்சத்தை உங்களுக்கு நான் சொல்லித்தர வேண்டாம் தானே சீதாம்மா?

சீதாம்மா நிறைய‌ விஷயங்களை சொல்லியிருக்கீங்க‌, அத்தனையும் உண்மைதான்! பிரச்சனைகள் இரண்டு பக்கமுமே இருக்கிறதுதான்!! 2பேரும் நீயா? நானா? என்று குடுமி பிடி பிடிச்சா மொத்தகுடும்பமும் பாதிப்புக்கு உள்ளாகும்!

மாமியாரா இருக்கிறவங்க‌ முதலடி எடுத்துவைத்தால் நல்லாயிருக்கும்னு நினைக்கத் தோன்றுகிறது! ஏனென்றால் அவர்கள் ஏற்கனவே மாமியாரிடம் அனுபவப்பட்டவர்கள்! அவர்களுக்கு ஆயிரம் விஷயங்கள் தெரிந்திருக்கும்!பல‌ மாமியார்களையும், மருமகள்களையும் அனுபவத்தில் கண்டிருப்பார்கள்! 2 பேரும் ஒத்துபோகலைன்னா எவ்வளவு பிரச்சனைகள் வரும்னு தெரிந்து வைத்திருப்பார்கள்! அவர்கள் குடும்ப‌ உறுப்பினர்கள் அனைவரும் அவர்களுக்கு பழையவர்கள்! பழகியவர்கள்!அனைவரின் குணாதிசயங்களும் அவர்களுக்கு அத்துப்படியாக‌ இருக்கும்!!மொத்தத்தில் கஷ்ட‌ நஷ்டங்களை பார்த்தவர்கள்!! அவர்கள் ஒரு ஆசான்!

புதிதாக‌ வரும் மருமகளுக்கோ அனைத்தும் புதுசு!! சமையல் தெரியாதிருக்கலாம்! அனைவரிடமும் எப்படி பழகுறதுன்னு புரியாமலிருக்கலாம்! உண்மையில் திருமணமாகும் ஒவ்வொரு பெண்னுக்கும் அது ஒரு புது உலகம்!! அனுபவம் எதுவுமில்லை!! எவ்வளவோ சின்ன‌ சின்ன‌ தயக்கங்கள், ஆசைகள் மற்றும் ஏக்கங்களும் இருக்கலாம்!! புதுசா பள்ளிக்குச் செல்லும் குழந்தையின் நிலமைதான் ஒவ்வொரு பெண்ணின் நிலமையும்!! மருமகள் ஒரு ப்ரி கே ஜி மாணவி!!

இப்படி இருக்கும் சூழலில் ஒரு ஆசானுக்குத்தானே, பொறுமையும் மற்றும் அன்பாக‌ சொல்லித்தரும் கடமையும் அதிகமாக‌ இருக்க‌ வேண்டும்!அவர்களிடம்தானே மற்றவர்கள் அதிகமாக‌ எதிர்பார்க்க‌ வேண்டிய‌ நிலமை இருக்கும்!

அன்பாகவும், பொறுமையாகவும் அதே சமயம் சிறு கண்டிப்புடன் இருக்கும் ஆசான்க‌ளை, பள்ளியில் படிக்கும் அத்தனை குழந்தைகளுக்கும் கண்டிப்பாக‌ பிடிக்கும்!! என்ன‌ ஒரு விஷயம் என்றால், புதுசா பள்ளிக்குச்செல்லும் குழந்தையை யாரும் பயமுறுத்தி பள்ளிக்கு அனுப்பமாட்டாங்க‌!! ஆசிரியை அடிப்பாங்க‌, கொடுமைபண்ணுவாங்கன்னு யாரும் சொல்லிக்குடுத்து அனுப்பமாட்டாங்க‌!! அதேபோல‌ கல்யாணம் ஆகிற‌ பெண்ணிடமும், புதுசா பள்ளிக்கு போற‌ குழந்தைகள்கிட்ட‌ சொல்ற‌ அறிவுறைகளையே சொல்லி அனுப்பினால் நல்லாயிருக்கும்!!

அதனால் அனுபவப்பட்ட‌ மாமியார்கள், புதுசா பள்ளிக்கு வர்றகுழந்தைகளை எப்படி அன்பா வரவேற்போமோ அப்படி வரவேற்று அன்போட‌ சொல்லிக்குடுத்தா நல்லாயிருக்கும்!!

மேலும் சில பதிவுகள்