தேதி: February 16, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. அஸ்மா அவர்கள் வழங்கியுள்ள கேழ்வரகு தோசை என்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய அஸ்மா அவர்களுக்கு நன்றிகள்.
கேழ்வரகு மாவு - 2 கப்
அரிசி மாவு - ஒரு கப்
பச்சை மிளகாய் - 4
நாட்டு வெங்காயம் - 12
பெருங்காயத் தூள் - ஒரு தேக்கரண்டி
புளித்த மோர் - 50 மில்லி
உப்பு - தேவையான அளவு
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.

மிக்ஸியில் பச்சை மிளகாய் மற்றும் நாட்டு வெங்காயத்தைப் போட்டு அரைத்தெடுத்துக் கொள்ளவும்.

அரைத்தவற்றுடன் மோர், பெருங்காயத் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு அதனுடன் அரிசி மாவையும், கேழ்வரகு மாவையும் போட்டுக் கலந்து கொள்ளவும்.

மாவுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

தோசைக் கல்லில் எண்ணெய் தடவி மெல்லிய தோசைகளாக ஊற்றி, மேலே சிறிது எண்ணெய் விட்டு, வெந்ததும் எடுக்கவும்.

சுவையான கேழ்வரகு தோசை தயார்.
