கம்பங்கூழ்

தேதி: February 16, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட வனிதா அவர்களின் கம்பங்கூழ் குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய வனிதா அவர்களுக்கு நன்றிகள்.

 

நொய்யரிசி - ஒரு கைப்பிடி அளவு
கம்பு
உப்பு
தயிர்


 

கம்பை அரை மணி நேரம் ஊற வைத்து, நிழலில் காய வைக்கவும்.
காய்ந்ததும் மிக்ஸியில் போட்டு பொடி செய்து (பச்சரிசி மாவு பொடிப்பது போல்) சலித்து வைக்கவும்.
அத்துடன் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு கலந்து வைக்கவும். (ஒரு இரவு ஒரு பகல் அப்படியே வைக்கவும்).
அடுத்த நாள் நொய்யரிசியை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
அத்துடன் கம்பு மாவுக் கலவையை சேர்த்து கலந்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.
மறுநாள் இத்துடன் தேவையான அளவிற்கு தயிர் கலந்தால் கம்பங்கூழ் தயார். சின்ன வெங்காயம் அல்லது வறுத்த மோர் மிளகாயுடன் பரிமாறலாம். மாங்காயுடன் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து அம்மியில் இடித்தெடுத்து, இந்தக் கூழுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

கம்பில் இரும்புச் சத்து நிறைந்துள்ளதால், இந்த கூழ் உடம்புக்கு மிகவும் நல்லது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எல்லாமே அருமையா இருக்கு. வாழ்த்துக்கள் கிட்சன் குயின். இந்த‌ கூழ் நான் வேறு மாறி செய்வேன். இந்த‌ முறையும் நல்லா இருக்கு. சத்தானது.

எல்லாம் சில‌ காலம்.....

என் குறிப்பையும் தேர்வு செய்து செய்து காட்டியமைக்கு மிக்க நன்றிகள் :) மகிழ்ச்சியா இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா