சைனீஸ் ஈஸி பைனாப்பிள் ரைஸ்

தேதி: February 16, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. மகாலெட்சுமி ப்ரகதீஷ்வரன் அவர்கள் வழங்கியுள்ள சைனீஸ் ஈஸி பைனாப்பிள் ரைஸ் குறிப்பு, சில மாற்றங்கள் செய்யப்பட்டு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய மகாலெட்சுமி அவர்களுக்கு நன்றிகள்.

 

பாஸ்மதி அரிசி - 2 கப்
பைனாப்பிள் - பாதி
வெங்காயம் - 2
குடைமிளகாய் - ஒன்று
கேரட் - 2
வெங்காயத் தாள் - ஒன்று
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு 2
பூண்டு - 12 பல்
பச்சை மிளகாய் - 3
சோயா சாஸ் - ஒரு மேசைக்கரண்டி
அஜினோமோட்டோ - அரை தேக்கரண்டி
கரம்மாசலாதூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி


 

பைனாப்பிளை அரைவட்ட வடிவத்துண்டுகளாக நறுக்கி வைக்கவும். குடைமிளகாய், வெங்காயம், கேரட், வெங்காயத் தாள், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும்.
சாதத்தை உதிர் உதிராக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.
அதனுடன் வெங்காயம், கேரட் மற்றும் குடைமிளகாய் போட்டு வதக்கவும். இவை வதங்கியதும் பைனாப்பிள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
கேரட் வேகும் வரை வதக்கி விட்டு வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் சாதத்தை போட்டு கிளறவும். இந்த சாதக் காய் கலவையில் கரம் மசாலாத் தூள் சேர்த்து வதக்கவும்.
அதில் சோயாசாஸ், அஜினோமோட்டோ, வெங்காயத்தாள் சேர்த்து கிளறி 3 நிமிடங்கள் மிதமான தீயில் மூடிப்போட்டு வேக வைக்கவும்.
சைனீஸ் ஈஸி பைனாப்பிள் ரைஸ் தயார். சூடாக இருக்கும் போதே பரிமாறவும்.

இது ஒரு விதமான ஸ்வீட் ரைஸ் என்பதால் உப்பு சேர்க்க அவசியமில்லை. ஆனாலும் சோயாசாஸ், அஜினோமோட்டோவிலும், வினிகரிலும் உப்பு சுவை இருப்பதால் நாம் போடத் தேவையில்லை.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்