சாம்பார் வெங்காயம்

தேதி: February 17, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. நித்யா கோபால் அவர்கள் வழங்கியுள்ள சாம்பார் வெங்காயம் என்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய நித்யா அவர்களுக்கு நன்றிகள்.

 

சாம்பார் வெங்காயம் - 12 - 15
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
மாங்காய் பொடி - 3/4 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

சாம்பார் வெங்காயத்தை தோல் உரித்து கழுவி வைக்கவும். மற்ற தேவையானவற்றையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
எல்லாப் பொடி வகைகளையும் ஒரு கிண்ணத்தில் போட்டு அதனுடன் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
வெங்காயத்தை இரண்டாக நறுக்கி மசாலாக் கலவையை அதில் நிரப்பவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை அதில் சேர்த்து மிதமான தீயில் வைத்து 7 - 8 நிமிடங்கள் வரை வதக்கவும்.
வெங்காயம் நன்றாக பொன்னிறமாகும் வரை வதங்கிய பின் அடுப்பிலிருந்து இறக்கி சப்பாத்தியுடன் பரிமாறவும்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எளிமையான சுவையான குறிப்பை கொடுத்த திருமதி. நித்யா கோபால் அவர்களுக்கு மிக்க நன்றி எப்படி இருக்குமோ என்று யோசித்து செய்தேன் ஆனால் சப்பாத்திக்கு செம சூப்பர்ர்ர்ர் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.