சீனி அவரைக்காய் பொரியல்

தேதி: February 17, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. மகாலெட்சுமி பிரகதீஸ்வரன் அவர்களின் சீனி அவரைக்காய் பொரியல் (கொத்தவரங்காய்) என்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய மஹாலெட்சுமி அவர்களுக்கு நன்றிகள்.

 

சீனி அவரைக்காய் - கால் கிலோ
புளி - சிறிய பாக்களவு
வெங்காயம் - அரை கப் (நீளவாக்கில் நறுக்கியது)
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
தாளிக்க :
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப


 

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். சீனி அவரைக்காயை இரண்டிரண்டாக நறுக்கி வைக்கவும். புளியை கால் கப் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வைக்கவும்.
குக்கரில் சீனி அவரைக்காயை போட்டு லேசாக வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேக வைத்து இறக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் வெந்த சீனி அவரைக்காய், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து பிரட்டவும்.
இவற்றுடன் புளிக் கரைசலை ஊற்றி காய் நன்றாக வதங்கியதும் இறக்கவும்.
சுவையான சீனி அவரைக்காய் பொரியல் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அனைத்து குறிப்புகளையும் மிக அழகாக வெளியிட்ட அறுசுவை குழுவினருக்கு மிக்க நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வித்யாசமன சுவையில் பொரியல் அருமையாக இருந்தது சுவையான குறிப்பை கொடுத்த திருமதி. மகாலெட்சுமி பிரகதீஸ்வரன் அவர்களுக்கு நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

I'm really appreciated because of this website