அரைக்கீரை பொரியல்

தேதி: February 18, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. லாவண்யா அவர்களின் அரைக்கீரை பொரியல் குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய லாவண்யா அவர்களுக்கு நன்றிகள்.

 

அரைக்கீரை - ஒரு கட்டு
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 2
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 10 பல்
தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
தாளிக்க : கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய்
உப்பு - தேவையான அளவு


 

கீரையை நன்கு சுத்தம் செய்து ஆய்ந்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.
வாணலியில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய் வதங்கியதும் பொடியாக நறுக்கிய கீரையை சேர்த்து வதக்கவும். சிறிது நேரத்தில் கீரையில் உள்ள தண்ணீர் வற்றியதும் உப்பு சேர்த்து வதக்கவும்.
கீரை வெந்ததும் அடுப்பை அணைத்து மிளகுத் தூள் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.
சுவையான அரைக்கீரை பொரியல் தயார்.

அரை கீரையில் இரும்பு சத்து அதிகம் இருக்கிறது. குழந்தை பிறந்த பிறகு இப்படி தான் செய்து தருவார்கள். இதை சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும். கீரையை (பச்சை காய்கறிகளை) எப்பொழுதும் மூடி போட்டு வேக விட கூடாது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Taste & health

Give respect and take respect