ஆப்ப ஆணம்

தேதி: February 18, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ஜுபைதா அவர்களின் ஆப்ப ஆணம் குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்துகாட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ஜுபைதா அவர்களுக்கு நன்றிகள்.

 

கடலைப்பருப்பு - 200 கிராம்
உருளைக்கிழங்கு - 100 கிராம்
வெங்காயம் - 50 கிராம் (நீளமாக நறுக்கியது)
தக்காளி - 50 கிராம் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
எண்ணெய் - 50 மி.லி
பட்டை - சிறு துண்டு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கரம் மசாலாத் தூள் - அரை தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை


 

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். உருளைக்கிழங்கை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். கடலைப் பருப்பை அரை மணி நேரம் நீரில் ஊற வைக்கவும்.
ப்ரஷர் குக்கரில் கடலைப் பருப்புடன் உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் வேக வைக்கவும்.
கிழங்கு மற்றும் பருப்பு வெந்ததும் குக்கரை திறந்து நன்கு மசித்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை சேர்த்து தாளித்து நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம், தக்காளி வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதனுடன் மிளகாய்த் தூள் சேர்த்து கிளறவும்.
பின்னர் மசித்த கடலைப்பருப்பு, உருளைக்கிழங்கு கலவையை சேர்த்து கிளறவும்.
அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ருசிக்கேற்ப உப்பு போட்டு 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
கலவை கொதித்ததும் அடுப்பை அணைத்து விட்டு கரம் மசாலாத் தூள், கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.
சுவையான ஆப்ப ஆணம் தயார்.

கடலைப்பருப்பு மற்றும் உருளைக்கிழங்கை பதமாக மசித்தால் ஆணத்திற்கு இன்னும் சுவையைக் கூட்ட உதவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஆப்ப ஆணம் இது என்ன ரேவ் கூட்டு மாதிரியா இல்லை குழம்பு மாதிரியா.. இது எதற்கு யுஸ் பண்ணலாம். சாப்பாடு டிபன் அனைத்திற்கும் யுஸ் பண்ணலாமா? பார்க்க சூப்பரா இருக்கு. அனைத்து படங்களும் சூப்பர்ம்மா..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ரேவ் ஆணம்னா குழம்புதான்.டிபன் வகைக்கு நல்லாருக்கும். செய்து பாருங்க.

Be simple be sample