பொட்டுக்கடலை துவையல்

தேதி: February 20, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ஜலீலா பானு அவர்களின் பொட்டுக்கடலை துவையல் குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ஜலீலா அவர்களுக்கு நன்றிகள்.

 

பொட்டுக்கடலை - ஐம்பது கிராம்
தேங்காய் - மூன்று பத்தை
பச்சை மிளகாய் - இரண்டு
இஞ்சி - ஒரு துண்டு
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் - பாதி


 

பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு பொடித்து தனியாக வைக்கவும்.
தேங்காய், பச்சைமிளகாய், இஞ்சி, மூன்றையும் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
அதனுடன் வெங்காயம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.
அதில் பொடி செய்த பொட்டுக்கடலையை போட்டு ஒரு முறை சுற்றி எடுத்து விடவும்.
சுவையான பொட்டுக்கடலை துவையல் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அட்மின் டீம் மற்றும் ஜலீலா அவர்களுக்கு மிக்க நன்றி

செம ஈஸி துவையல்... சட்னியை விட சாத வகைகளுக்கு நல்ல காம்போ....

வாழ்த்துக்கள் பிரியா

என்றும் அன்புடன்,
கவிதா