சோயா 65

தேதி: February 20, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ஆமினா அவர்களின் சோயா 65 என்கின்ற குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ஆமீனா அவர்களுக்கு நன்றிகள்.

 

சோயா - 100 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
சிக்கன் 65 மசாலா - ஒரு தேக்கரண்டி
கடலை மாவு - 50 கிராம்
மிளகாய்த் தூள் - தேவையான அளவு
கரம் மசாலாத் தூள் - சிறிதளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


 

சோயாவில் சூடான தண்ணீரை ஊற்றி 15 நிமிடம் ஊற வைக்கவும்.
சோயா நன்கு ஊறிய பின்னர் தண்ணீர் முழுவதையும் பிழிந்து விட்டு மிக்ஸியில் போட்டு ஒரு முறை சுற்றி எடுக்கவும்.
பின்பு அரைத்த சோயாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி எண்ணெய் தவிர மேலே சொன்ன மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து பிசைந்து வைக்கவும். உருண்டை பிடிக்கும் அளவிற்கு இருந்தால் போதுமானது. அதிக தண்ணீர் சேர்க்க தேவையில்லை.
பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான சோயா 65 தயார்.

சாம்பார் சாதம், ரச சாதம் ஆகியவற்றுடன் சரியான ஜோடி. உடனே செய்து விடக்கூடிய சைட் டிஷ்.

மாலை நேர ஸ்நாக்ஸாக கூட சாப்பிடலாம். புளிப்பு சுவை விரும்பினால் தண்ணீருக்கு பதில் 2 தேக்கரண்டி தயிர் சேர்த்து பிசையலாம் அல்லது எலுமிச்சை சாறு பிழியலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சோயா 65 பார்க்கும் போதே சாப்பிடனும்னு தோணுது , ரொம்ப‌ கிரிஸ்பியா இருக்கும் போல‌, சூப்பர் அன்ட் ஈஸி.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

குறிப்பை வழங்கிய ஆமினா அவர்களுக்கும் வெளியிட்ட அட்மின், டீம் அவர்களுக்கும் நன்றிகள்

செய்ய ரொம்ப எளிது ஆனா டேஸ்ட் சூப்பர்....

மிக்க நன்றி... செய்து பாருங்க

Superana dish seiavum easya iruku and tasteum super.

supero super