அவல் உப்புமா

தேதி: February 21, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

அவல் - 1/4 கிலோ
வெங்காயம் - 2 (மீடியம் சைஸ்)
பச்சை மிளகாய் - 3
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தாளிக்க;
கடுகு, உளுந்து - ஒரு தேக்கரண்டி
கடலை பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து


 

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.
அவலை தண்ணீர் சேர்த்து இரண்டு முறை கழுவி ஊற வைக்கவும்.
காடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
பருப்பு பொன்னிறமானதும் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய் வதங்கியதும் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
அதில் ஊறிய அவலலை சேர்த்து கிளறி சிறிது தண்ணீர் தெளித்து கிளறி விட்டு வெந்ததும் இறக்கவும்.
சுவையான அவல் உப்புமா தயார். மல்லித் தழை தூவி, சூடாக இருக்கும் போதே பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Aval upma yummmmy receipe.ithula egg fry panni add panna innum taste allum.vaalthukal kitchen queen.ur receipes are looking good and different.

அவல் உப்புமா ரெசிபி ரொம்ப‌ நல்லா இருக்கு..
எளிமையான‌ உணவு,, நிச்சயம் செய்து பார்க்கிறேன்,,

"எல்லாம் நன்மைக்கே"