பொரித்த ரசம்

தேதி: February 23, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

துவரம் பருப்பு - கால் ஆழாக்கு
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி
கடலைப் பருப்பு - அரை தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - ஒன்று
பெருங்காயம் - சிறு துண்டு
சீரகம் - கால் தேக்கரண்டி
தக்காளி - ஒன்று


 

ஒரு பாத்திரத்தில் துவரம் பருப்பைப் போட்டு தண்ணீர் ஊற்றி பருப்பு குழையும் அளவிற்கு வேக வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையானவற்றையும் தயாராக எடுத்து வைக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, மிளகு, கடலைப்பருப்பு, பெருங்காயம், மிளகாய் வற்றல் ஆகியவற்றைப் போட்டு வறுத்து எடுக்கவும்.
வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஆற வைத்து அதனுடன் சீரகத்தையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
வேக வைத்த பருப்புடன் மேலும் சிறிது தண்ணீர் ஊற்றி தக்காளியைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
தக்காளி குழைய‌ வெந்ததும் அரைத்து வைத்திருக்கும் பொடியை சேர்த்து நுரைத்து வந்ததும் இறக்கவும். அதனுடன் கடுகு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும். சுவையான பொரித்த ரசம் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Ellaa kurippum simple and super. First time magudam suduringanu ninaikiren. Vaazthukkalum paaraatukkalum. Padangalum azagaa vandhirukku manju :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா