ஓட்ஸ் டயட் இட்லி

தேதி: February 24, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ஸ்ரீவித்யா மோகன் அவர்களின் ஓட்ஸ் டயட் இட்லி என்கின்ற குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய ஸ்ரீவித்யா அவர்களுக்கு நன்றிகள்.

 

சம்பா கோதுமை ரவை - ஒரு கப்
ஓட்ஸ் - அரை கப்
உப்பு - தேவையான அளவு
புளித்த தயிர் - ஒரு தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
கடலை பருப்பு - அரை தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய இஞ்சி - அரை தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
தாளிக்க :
எண்ணெய் - 2 தேக்கரண்டி
முந்திரி - தேவையான அளவு


 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
ஓட்ஸை மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்துக் கொள்ளவும்.
பொடித்த ஓட்ஸை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதனுடன் ஒரு கப் கோதுமை ரவை, புளித்த தயிர் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு, சிறிது தண்ணீரும் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். கரைத்த மாவுடன் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு இட்லி தட்டில் ஊற்றி முந்திரியை வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
சுவையான ஓட்ஸ் டயட் இட்லி தயார். இதை தேங்காய் மற்றும் கொத்தமல்லி சட்னியுடன் சூடாக சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்