தேதி: February 25, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
துவரம் பருப்பு - ஒரு கப்
காய்ந்த மிளகாய் - 6
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
எல்லாப் பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.

துவரம் பருப்பை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து இறக்கி வைக்கவும்.

அதில் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக பொடி செய்து சேர்க்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும், காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு கறிவேப்பிலையும் சேர்த்து வதக்கவும்

வதக்கிய கலவையை பருப்பில் கொட்டிக் கிளறவும்.

சாதத்துடன் நெய் விட்டு இந்த பருப்பை சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Comments
sumi
வாவ் வாவ் வாவ்... எனக்கு இந்த குறிப்பு சிம்பிளா இருந்தாலும் ஃபோட்டோ ரொம்ப பிடிச்சிருக்கு சுமி. :) வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி..
வருகைக்கும் வாழ்த்திற்க்கும் ரொம்ப நன்றி வனி..:)
//எனக்கு இந்த குறிப்பு சிம்பிளா இருந்தாலும் ஃபோட்டோ ரொம்ப பிடிச்சிருக்கு சுமி// மெய்யாலுமா சொல்றீங்க வனி..;)
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....