ஓட்ஸ் டயட் ரொட்டி

தேதி: February 25, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

திருமதி. ஸ்ரீவித்யா அவர்களின் ஓட்ஸ் டயட் ரொட்டி என்ற குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ஸ்ரீவித்யா அவர்களுக்கு நன்றிகள்.

 

ஓட்ஸ் - 3 கப்
ஆட்டா மாவு - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஓட்ஸை மிக்ஸியில் போட்டு பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு அதனுடன் ஆட்டா மாவையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து, வெந்நீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசையவும்
பிசைந்த மாவை தேவையான அளவில் உருண்டையாக உருட்டி ஒரு மூடி போட்ட பாத்திரத்தில் வைத்து அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
பிறகு மெல்லிய சப்பாத்திகளாக தேய்த்து தவாவில் போட்டு சுட்டு எடுக்கவும்.
விருப்பமான குருமா வகைகளுடன் சேர்த்து சாப்பிட ஓட்ஸ் டயட் ரொட்டி தயார்.

சாதாரணமாக சப்பாத்தி மாவுக்கு ஊற்றும் நீரைவிட சிறிது அதிகமாக ஊற்றி பிசைய வேண்டும்.

வெயிட் குறைக்க விரும்புவர்களுக்கு ஏற்ற ரொட்டி இது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Hai srivithya,very nice recipe,everyone can use it.from today am gonna follow this
thank u

எல்லா குறிப்பினையும் அழகாக வெளியிட்ட‌ எனது அன்பு அறுசுவை டீமிற்க்கு என் மனமார்ந்த‌ நன்றிகள். குறிப்பினைக் கொடுத்த‌ எல்லா தோழிகளுக்கும் எனது நன்றிகள்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

இது எண்ணெய் சேர்க்காத கோதுமை சப்பாத்தி போன்று சாஃப்டா வருமா ? செய்துப் பார்க்க வேண்டும்.

//இது எண்ணெய் சேர்க்காத கோதுமை சப்பாத்தி போன்று சாஃப்டா வருமா ?// ஆமாம் வாணி. மாவை பிசையும் போது தண்ணீர் தெளித்து தெளித்து பிசையுங்கள். எவ்வளவு நேரம் மாவை ஊற‌ வைக்கிறோமோ அதற்கு தகுந்தாற் போல‌ சாப்ட் கிடைக்கும்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

நன்றி சுமி. செய்து விட்டேன். சாஃப்டாகத்தான் வந்தது.

Superb Sister. Diet recipe