தால் பஞ்சாரி

தேதி: February 26, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. நித்யாகோபால் அவர்களின் தால் பஞ்சாரி குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய நித்யா அவர்களுக்கு நன்றிகள்.

 

கருப்பு உளுந்து - கால் கப்
கடலைப் பருப்பு - 3 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
லவங்கம் - 2
பட்டை - ஒன்று
சிகப்பு மிளகாய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - ஒன்று
நெய் - 2 மேசைக்கரண்டி
இஞ்சி - 2 தேக்கரண்டி
கொத்தமல்லி - தேவைக்கு


 

பருப்பு வகைகளை நன்றாக களைந்து குக்கரில் போட்டு 3 கப் தண்ணீர் ஊற்றி 4 - 5 விசில்கள் வரும்வரை வேக வைக்கவும். பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
கடாயில் நெய் ஊற்றி லவங்கம், பட்டை, சிகப்பு மிளகாய், வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்
வேக வைத்த பருப்புடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பருப்பு மசியும்படி கிளறி விட்டு தாளித்த நெய் கலவையில் சேர்த்து 4 - 5 நிமிடம் கொதிக்க விடவும்.
பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி மல்லித்தழை மற்றும் இஞ்சி துண்டுகளை தூவி பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்