பாதுஷா

தேதி: February 27, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

மைதா - கால் கிலோ
சமையல் சோடா - அரைத் தேக்கரண்டி
வனஸ்பதி - 100 கிராம்
சீனி - கால் கிலோ


 

மைதா மாவை நன்கு சலித்து எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன், சமையல் சோடா, வனஸ்பதி சேர்த்து கலந்துக் கொள்ளவும். அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் சீனியை போட்டு அரை கப் தண்ணீர் சேர்த்து கம்பி பாகாக காய்ச்சிக் கொள்ளவும்.
மாவினை சிறு உருண்டையாக உருட்டி, அதனை வடைப் போல் தட்டவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் செய்து வைத்திருக்கும் பாதுஷாவை போட்டு மிதமான தீயில் வைத்து லேசாக சிவந்து வரும் வரை வேக விடவும்.
பாதுஷா லேசாக சிவந்து வெந்ததும் பாகில் போட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் எடுத்து சுவைக்கவும். சுவையான பாதுஷா தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கிச்சன் குயின் கல்ப்ஸ்க்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் :) அனைத்து குறிப்புகளும் கலக்கலா இருக்குப்பா பாதுஷா சூப்பரு :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சூப்பர் சூப்பர் சூப்பரு.. அம்முட்டுதான் சொல்வேன்.. பாதுஷா யம்மி யம்மி..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்