எனக்கு திருமணமாகி 3.5 வருடங்கள் ஆகிறது, 2 வருடங்கள் கணவர் வெளிநாட்டில் இருந்தார் , கடந்த 5 மாதங்களாக குழந்தைக்கு முயன்று வருகிறோம், ஆனால் என்னும் கரு தரிக்க வில்லை..
நான் இப்போது U.S.A வில் இருக்கிறேன் , இப்போது நாங்கள் இருவரும் முதல் கட்ட பரிசோதனைக்கு மருத்துவரிடம் சென்றோம். கணவருக்கு semen analysis செய்ய கூறினார்கள். மற்றும் எனக்கு scan செய்தார்கள் " chain cysts in contract with polycystic ovarian syndrone" தெரியவந்தது , அனால் ஒரு வருடம் முன்பு scan செய்த பொது PCOD எதுவும் இல்லை அனால் எப்படி வந்தது என்று தெரிய வில்லை , கொஞ்சம் தொப்பை வந்துருக்கு அனால் அனால் எடையில் எந்த பெரிய வித்யாசம் இல்லை அனால் நடை போயிற்சி தினமும் ஆரம்பித்து விட்டேன்.
அடுத்தது மாதவிடாய் முதல் நாள் "CLOMID" , hormone blood test காகவர சொல்லிருகிரார்கள். PCOD எப்படி எதில் இருந்து மீள்வது? இதற்கும் கரு தரிப்பதற்கு வாய்புகள் குறைவா ? இங்கு மருத்துவர் என்னை எதுவும் சொல்லி பயமுறுத்த வில்லை. அனால் எனக்கு பல சந்தேகங்கள் வருகின்றன.. இங்கு தோழிகளின் உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்..
நன்றி!!
ரேவதி
Don't worry
Hi revathi, I'm married and have two children..nowadays pcod is very common so don't worry because I had water cyst when I was 13 year old, they said it's not combined with uterus but it's combined we will remove both ovary and uterus.. So pcod has very small small cysts and it's not much affected about pregnancy so take treatment with lots of hope, you will get pregnant within one year..all the best
thank you
Hi sister, thank you.. I hope for the best.
Revathy
Love is God!!!
Revsam
Dear
எனக்கும் உங்களைப்போன்ற பிரச்சனை வந்தது. நான் கடைப்பிடித்த சில நடைமுறைகளை கூறுகின்றேன்.
1.தினமும் குறைந்தது 2 லி தண்ணீர் குடியுங்கள்.காலையில் எழுந்ததும் 250 மிலி தண்ணீர் குடியுங்கள்.
2.எண்ணை உணவுகளை தவிருங்கள். மாலைநேர சிற்றுன்டிக்கு கேக்,பிஸ்கட், குக்கீஸ்,மிக்சர் போன்றவற்றை தவிர்த்து பயறு வகைகளை அவித்து சேர்த்துக் கொள்ளுங்கள்.
3.நடைப்பயிற்சியின் போது கைகளை வீசி நடக்கவும்.குறைந்தபட்சம் 40 நிமிடம் இடை நில்லாமல் நடக்கவும்.
4.குளிர்பானங்களை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.
5.பதப்படுத்தப்பட்ட , இன்ஸ்டன்ட் உணவுகளை தவிர்த்து விடுங்கள்.
மேல் கூறியவற்றை குறைந்தபட்சம் 3 மாதங்கள் கடைபிடியுங்கள்.
மற்றும் தங்கள் மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்.
விரைவில் நல்லது நடக்கும்
நிஷா
Hi nisha
நன்றி தோழி நிஷா ,
நீங்கள் சொன்ன வாறு கடைபிடிக்கிறேன் .
ரேவதி
Love is God!!!
இறந்தவர்களின் பெயரை குழந்தைக்கு வைக்கலாமா
என் தம்பி இறந்து 10 வருடம் ஆகிறது என் இரண்டாவது குழந்தைக்கு என் தம்பியின் பெயரை வைக்கலாமா... வைக்கலாம் என்றால் முழு பெயரையும் வைக்கலாமா அல்லது ஆரம்ப எழுத்தில் மட்டும் வைக்கலாமா.. என் தம்பியின் பெயரை வைத்து என் குழந்தையை வாய் நிறைய பெயர் சொல்லி கூப்பிட ஆசை, என் பெற்றோர்களும் சந்தோஷப்படுவார்கள்.... முதல் குழந்தைக்கு குலதெய்வம் பெயரை வைத்து விட்டு இரண்டாவது குழந்தைக்கு இது போல பெயரை வைக்கலாமா உதவுங்கள் தோழிகளே
மன்னிக்கவும்
இந்த கேள்வியை எந்த இழையில் கேட்க வேண்டும் என்று தெரியவில்லை பொருத்தமான இழையை தேடி கிடைக்காமல் இதில் கேட்டு விட்டேன்
பெயர்
//இரண்டாவது குழந்தைக்கு என் தம்பியின் பெயரை வைக்கலாமா.// தாராளமாக வைக்கலாம். //ஆரம்ப எழுத்தில் மட்டும் வைக்கலாமா.// ஆரம்ப எழுத்தில் வைப்பதும் அதே பெயரை வைப்பதும் ஒன்றல்ல. //தம்பியின் பெயரை வைத்து என் குழந்தையை வாய் நிறைய பெயர் சொல்லி கூப்பிட ஆசை,// அப்படியானால் முதல் எழுத்தில் ஏதோ ஒரு பெயரை வைப்பதால் பயன் இல்லை இல்லையா! //என் பெற்றோர்களும் சந்தோஷப்படுவார்கள்.// ஊகிக்க வேண்டாம். பேசிப் பாருங்கள். //முதல் குழந்தைக்கு குலதெய்வம் பெயரை வைத்து விட்டு இரண்டாவது குழந்தைக்கு இது போல பெயரை வைக்கலாமா// உங்களுக்கு அது நல்லது என்று தோன்றினால் சந்தோஷமாகச் செய்யுங்கள். பாதகம் எதுவும் இராது.
குழந்தைகளுக்கான பெயர்கள் தொடர்பாக பல இழைகள் இருக்கின்றன.
- இமா க்றிஸ்
AnuradhaKR
சாஸ்திரப்படி வைக்கலாமா கூடாதா என எனக்கு தெரியாது.
ஆனால் நீங்கள் இறந்த உங்கள் தம்பிக்கு சிரார்த்த திதி செய்யும் வேளைகளில் பெயர் சொல்லி செய்கையில் மன சங்கடம் ஏற்படலாம்.
வேண்டுமானால் தம்பியின் வீட்டுப் பெயரைக் (செல்லப் பெயர் ) கொண்டு மகனை அழையுங்கள்.
(அ) பாதிப் பெயரை வையுங்கள்.
பெயர்
//இறந்த உங்கள் தம்பிக்கு சிரார்த்த திதி செய்யும் வேளைகளில் பெயர் சொல்லி செய்கையில் மன சங்கடம் ஏற்படலாம்.// இது உண்மைதான்.
- இமா க்றிஸ்
Imma mam thank you
என் பிள்ளைக்கு தம்பியின் பெயரை வைத்திருப்பதை நினைத்து என் பெற்றோர்கள் சந்தோஷப்படுவார்கள் என்றே நினைத்தேன். நீங்கள் கூறிய பிறகே இதில் அவர்களுக்கு மாறான விருப்பமும் இருக்கலாம் என்று நினைக்கிறேன்...என் பெற்றோர்களிடம் இது பற்றி கேட்கிறேன்... ரொம்ப நன்றி அம்மா