முள்ளங்கி கீரை பொரியல்

தேதி: February 28, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

முள்ளங்கி கீரை - ஒரு கட்டு (5 அல்லது 6 முள்ளங்கியின் கீரை)
வேர்க்கடலை - ஒரு கை
மிளகாய் வற்றல் - 2 அல்லது 3
உப்பு
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு - தாளிக்க


 

முள்ளங்கி கீரையை பொடியாக நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளித்து, கீரை சேர்த்து வதக்கி மூடி வேக விடவும். நீர் சேர்க்க தேவையில்லை.
வேர்கடலையை வறுத்து அதனுடன் மிளகாய் வற்றல் சேர்த்து கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
கீரை வெந்ததும் உப்பு, பொடித்த வேர்க்கடலையை சேர்த்து நன்றாக கிளறி 2 நிமிடம் வதக்கி எடுக்கவும்.
சுவையான சத்தான முள்ளங்கி கீரை பொரியல் தயார்.

மிளகாய் வற்றலை பொடிக்காமல் தாளிக்கவும் செய்யலாம்.

வெங்காயம் பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கி விட்டு பின் கீரை சேர்த்தும் வதக்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பச்சை பளேரென்று கண்ணுக்கு இதமாக உள்ளது. சத்தான குறிப்பு கொடுத்த வனிக்கு என் நன்றிகளும் பாராட்டுகளும்.. முள்ளங்கி கீரை கிடைத்தால் நிச்சயம் ட்ரை பண்ணிட்டு போட்டோ போடுறேன் வனி... நன்றி..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

போன வாரம் தான் முள்ளங்கி கீரையில் கூட்டு செய்தேன். அடுத்த முறை இது போன்று பொரியல் செய்யணும். கடலை பொடித்து சேர்ப்பதால் கீரையிலுள்ல தண்னீர் எல்லாம் டிரை ஆகிடும் தானே வனி, அப்படின்னா பொட்டு கடலை பொடி தூவலாமா? வேர்க்கடலை எனக்கு ஆகாது.