தேதி: February 28, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
மாவு - ஒரு கோப்பை (250 மி.லி)
பேக்கிங் பௌடர் - ஒரு தேக்கரண்டி
மேசை உப்பு - கால் தேக்கரண்டி
பால் - அரை கோப்பை
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். முற்சூடு செய்வதற்காக அவனை 250°c ல் போட்டு வைக்கவும்.

மாவுடன் பேக்கிங் பௌடரையும் உப்பையும் சேர்த்துச் சலித்துக் கொள்ளவும்.

நடுவில் ஒரு பள்ளம் செய்து கொண்டு பாலை அதில் ஊற்றி ஒரு கத்தியால் விரைவாகக் குழைக்கவும்.

குழைத்த மாவை ஒரு மாவு தூவிய பலகையில் கொட்டி, மாவு பூசிய கையால் 1 செ.மீ மொத்தம் வருமாறு தட்டி எடுக்கவும்.

இதனை எண்ணெய் தடவிய பேக்கிங் தட்டிற்கு மாற்றி 10 - 15 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

பட்டர், மார்மைட் அல்லது ஜாம் தடவி சூடாகச் சாப்பிடவும்.

இது நியூசிலாந்திற்கு முதல்முதலில் வந்து சேர்ந்தவர்களான மெளரி மக்களது சமையல்.
Comments
இமா அம்மா
மௌரி ப்ரெட் வித்தியாசமான குறிப்பு அம்மா. உங்கள் குறிப்புகள் அனைத்தும் வித்தியாசமாக உள்ளது. வித விதமாக அனைத்து ஊர் ரெபிகளையும் கொடுக்கிறீங்க. எல்லாமே சூப்பர்ம்மா.. கலக்கல் ராணிக்கு ஒரு ஓஓஓஓ..
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
இமா
சூப்பர்... ட்ரை பண்ணிடுவோம் கண்டிப்பா :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா