மசாலா வேர்கடலை பொரி

தேதி: February 28, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பொரி - ஒரி கப்
வேர்க்கடலை - ஒரு கப்
காரபூந்தி (அ) மிக்சர் - ஒரு கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
பெங்களூர் தக்காளி - ஒன்று
கேரட் - ஒன்று
வெள்ளரிக்காய் - ஒன்று
கொத்தமல்லித் தழை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மிளகாய்த் தூள் - தேவையான அளவு
சிறிய எலுமிச்சை பழம் - ஒன்று


 

பொரி மற்றும் காரபூந்தியை ஒரு கப்பில் எடுத்துக் கொள்ளவும்.
வேர்க்கடலையை வேக வைத்து தோலுரித்து தயாராக வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, கேரட், வெள்ளரிக்காய், கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து எலுமிச்சை பழத்தை பிழந்து நன்கு கிளறி விடவும்.
பொரி கலவையை ஒரு சின்ன கிண்ணத்தில் போட்டு பரிமாறவும். எளிதில் செய்ய கூடிய மசாலா வேர்கடலை ரெடி.

இதில் மாங்காய் சேர்த்தும் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்ல சாட் ஐட்டம்... மாலை நேரத்தில் டீ கூட கொடுத்தா, வனி சாப்பிட்டுகிட்டே இருப்பேன் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா