பாகற்காய் சம்பல்

தேதி: March 2, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 4.5 (2 votes)

 

நடுத்தர அளவான பாகற்காய்கள் - 2 (500 கிராம்)
தக்காளி - 150 கிராம்
பெரிய வெங்காயம் - பாதி
பச்சை மிளகாய் - ஒன்று
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - அளவுக்கு
எண்ணெய் - பொரிக்க


 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை மெல்லியதாக, நீளமாக அரிந்து உதிர்த்து வைக்கவும்.
தக்காளி, பச்சை மிளகாயை வட்டமாக நறுக்கி வைக்கவும்.
பாகற்காயைக் கழுவி நீளமாக இரண்டாக வெட்டி, உட்பகுதியை கரண்டியால் சுரண்டி நீக்கி மெல்லிதாக (அரைவட்டமாக) நறுக்கி வைக்கவும்.
நறுக்கிய பாகற்காயுடன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்துப் பிசறி வைக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காய விட்டு, காயை சிறிது சிறிதாகப் போட்டு (காய் நீர் விட்டு இருக்கும். அழுத்திப் பிழியாமல் வடித்து எடுத்துப் போடவும்) பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
பேப்பர் டவலில் பரவலாகப் போட்டு நன்கு எண்ணெயை வடியவிடவும்.
அனைத்தையும் தயாராக வைத்திருந்து பரிமாறுமுன் கலந்து பரிமாறவும். (ஏற்கனவே பொரிக்கும் சமயம் காய்க்கு உப்பு சேர்த்திருப்பதால் இப்போது குறைவாகச் சேர்த்தால் போதும்) கலக்கும் போது அழுத்திப் பிசைய வேண்டாம். சம்பலில் பாகற்காய்த் துண்டுகள் இளகாமல் மொறுமொறுப்பாக இருக்க வேண்டும். கசக்காத, சுவையான சம்பல் இது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பாகற்காய் தக்காளின்னு கலர்ஃபுலா இருக்கு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா