வடகறி

தேதி: March 2, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

 

கடலைப்பருப்பு - 100 கிராம்
வெங்காயம் - 4
சோம்பு - 2 தேக்கரண்டி
பொட்டுக்கடலை - 50 கிராம்
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - ஒன்று
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான‌ அளவு
உப்பு - தேவையான‌ அளவு


 

கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து, அத்துடன் பூண்டு, வெங்காயம், சோம்பு சேர்த்து வடை மாவு பக்குவத்தில் அரைக்கவும்.
அரைத்த மாவில் உப்பு சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டி, பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
வெறும் கடாயில் உடைத்த கடலையைப் போட்டு வறுக்கவும். அதனுடன் பூண்டு, இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வறுத்து ஆற வைக்கவும்.
ஆறியதும் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுக்கவும்.
மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சோம்பு தாளிக்கவும். அதில் வெங்காயம், கறிவேப்பிலை, போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அரைத்த பொட்டுக்கடலை விழுதைச் சேர்த்து வதக்கி உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
இந்த விழுதுடன் வடைகளை உதிர்த்துச் சேர்த்துக் கிளறிவிடவும்.
பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து கலவை கெட்டியானதும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.
இடியாப்பம், இட்லி தோசைக்கு ஏற்ற, சுவையான வடகறி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா& டீம் மிக்க நன்றி

Be simple be sample

வடைகறி ம்ம்ம் இட்லிக்கு ரொம்ப‌ நல்லா இருக்குமே... ரெசிபி அருமை..

"எல்லாம் நன்மைக்கே"