இந்தியா தோழிகளே

இந்தியா தோழிகளே எனக்கு உதவுங்கள்
புளுங்கல் அரிசி என்ரால் என்ன? பச்சை அரிசி என்ரால் என்ன? நாங்கள் (இலங்கை) பாவிக்கும் அரிசி தானா? ஏன் என்றால் அறுசுவையில் இட்லி தோசை ரெசிபிகள் எல்லாம் பச்சை அரிசி,புளுங்கல் அரிசி என்று இருக்கு
எனக்கு எது என்று தெரியல pls help me

துஷாரா
உதவி செய் ஆனால் பலனை எதிர்பார்கதே

துஷாரா தோழி, நன்றி உங்க கேள்விக்கு

\\புளுங்கல் அரிசி என்றால் என்ன? பச்சை அரிசி என்றால் என்ன?\\

அவிக்காம பச்சையா இருந்தா அது பச்சரிசி. இட்லி, ஆப்பம், பொங்கல் நல்லா வரும். புளுங்கல் அரிசி அவிச்சி நெல் குத்துவாங்க, (சூடு பண்ணினா புளுங்கும்ல, அதான் புளுங்கல் அரிசின்னு பேர் வந்திருக்கும்ன்னு நினைக்கிறேன்) சோறு, சாதம், பூவா செய்வாங்க.

இந்த பிரச்சனை நாலு வருஷம் முன்னாடியே வந்திருக்கு, கீழ உள்ள அட்ரஸ்ல போய் பாருங்க.

http://www.arusuvai.com/tamil/node/9946?page=2

உன்னை போல் பிறரை நேசி.

ரொம்ப நன்றி தோழி நான் தெரியதா உணவு பகுதியில் தேடினேன்ப்பா அங்க எனக்கு கிடைகல

உதவி செய்தற்க்கு ரொம்ப நன்றி

துஷாரா
உதவி செய் பலனை எதிர்பார்காதே

//நாங்கள் (இலங்கை) பாவிக்கும் அரிசி தானா?// இரண்டும் இலங்கையிலயும் இருக்கே துஷாரா. //பச்சை அரிசி// வெள்ளைப் பச்சை, சிவத்தப் பச்சை என்று கிடைக்கும். சிவப்பு - தவிட்டரிசி. இவை பொங்கல், கிரிபத் செய்யப் பயன்படுத்துவது. //புளுங்கல் அரிசி// சோறு ஆக்கும் அரிசி.

‍- இமா க்றிஸ்

ரொம்ப நன்றி இமாம்மா நான் நம் நாட்டு அரிசி தானா இல்ல இந்தியவில் வேற மாதிரி இருக்குமோ என்ற சந்தேகதில் கேட்டேன் அம்மா வெளிநாடுகளில் இந்த அரிசி english கடைகலில் கிடைக்குமா? இமாம்மா

அன்புடன்
துஷாரா

வயலில் அறுவடை செய்த‌ நெல்லை அப்படியே மிஷினில் கொடுத்து அரைத்தால் கிடைப்பது பச்சரிசி.

நெல்லை மாலையில் தண்ணீரில் ஊறப் போட்டு மறுனாள் காலையில் பாய்லரில் போட்டு லேசாக‌ ஆவியில் அவித்து உலர்த்தி அரைத்தால் கிடைப்பது புழுங்கல் அரிசி

புரியுதா தோழி

தோழிகளே சீஃபுட். உணவில் சுரீமி ஸ்டிக் என்பது என்ன? தெரிந்தால் கூறவும்.

http://www.arusuvai.com/tamil/node/29232

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி மேடம் உங்க குறிப்பை பாத்துதான் கேட்டேன் . நான் சிங்கப்பூரில் சுரீமி ஸ்டிக் சாப்பிட்டுள்ளேன். ஆனால் அதன் பெயர் இந்த குறிப்பின் மூலம் தெரிந்து கொண்டேன். அது ஒரு வகை மீனா? உங்களுடைய குறிப்பு நன்றாக இருந்தது. செய்து பார்க்கலாம் என கேட்டேன் .

Adhu en kurippu illainga. Vani selwyn kurippu. Crab meatnu ninaikiren. Engo idhu parri discuss pannirukaanga.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//அது ஒரு வகை மீனா?// இல்லை. மீன்களின் கலவை. மீன் சதையை அரைத்து நண்டுச் சுவை கொடுத்துச் செய்திருப்பார்கள். சமைக்காமலே சாப்பிடலாம்.

http://www.arusuvai.com/tamil/node/29034
தர்ஷாவின் வறை குறிப்பு - http://www.arusuvai.com/tamil/node/29824

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்