புடலங்காய் பருப்பு கறி

தேதி: March 4, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. தயாபரன் வஜிதா அவர்கள் வழங்கியுள்ள புடலங்காய் பருப்பு கறி என்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய வஜிதா அவர்களுக்கு நன்றிகள்.

 

பருப்பு - 200 கிராம்
புடலங்காய் - 200 கிராம்பச்சைமிளகாய் - 2
வெங்காயம் - ஒன்று
தேங்காய் பால் - 2 தேக்கரண்டி (முதற்பால்)
கறிவேப்பிலை - சிறிதளவு
அரைப்பதற்கு :
உள்ளி - 4 பல்
மிளகு - 5
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் - ஒரு தேக்கரண்டி


 

பருப்பை 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
புடலங்காயை சுத்தம் செய்து சின்ன சின்ன சதுரங்களாக நறுக்கி வைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.
அரைக்க வேண்டிய பொருட்களை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் பருப்பை போட்டு ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
தண்ணீர் கொதித்து பருப்பு வெந்ததும் புடலங்காயையும் அதனுள் போட்டு வேக விடவும்.
பின்பு வெங்காயம், பச்சை மிளகாயை சேர்க்கவும்.
பருப்பு மற்றும் புடலங்காய் வெந்ததும் உப்பு மற்றும் அரைத்து வைத்த எல்லாவற்றையும் சேர்த்து கலந்து விடவும்.
கடைசியாக தேங்காய் பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
சாதம், தோசை, இட்லி போன்றவற்றுடன் பரிமாறலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்