How to increase my son's weight who remains 25kgs since 3 years and aged now 10years?

Please any body can help to increase my son's weight. I am ashamed as tried in many ways and he remains 25kgs since 3 years. Some times I think what is the use of my education even cannot manage my Child by healthwise. Because he even has problem of wheezing as allergic to pollution and cold.

Experted help me please.......

With thanks,
Mumtaz

டியர் மும்தாஜ் எப்படி இருக்கின்றீர்கள்? தங்களின் குழந்தையின் ஆரோக்கியத்தைக் குறித்து மிகவும் வருத்தத்துடன் எழுதியிருந்தீர்கள்.நீங்கள் இதில் வருத்தப்பட ஒன்றுமே இல்லை. அதிலும் நீங்கள் படித்த படிப்பிற்க்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தான் கூறுவேன்.
குழந்தையின் அறிவை வளர்க்க நீங்கள் படித்த படிப்பை உபயோகப் படுத்துங்கள்.
ஆனால் உடலை வளர்க்க நல்ல ஆகாரத்தை வழங்குங்கள், அதுப்போதும்.
பொதுவாக ஆண்குழந்தைகளின் உடல் வளர்ச்சி சற்று மெதுவாக தான் இருக்கும். பதினான்கு, அல்லது பதினைந்து வயதில் தான் அவர்களின் தோற்றத்தில் சிறிது மாற்றம் தெரியும்.அதன் பிறகு கட கட என்று வளர்ந்து விடுவார்கள். ஆகவே நீங்கள் கவலை படுவதை விட்டு விட்டு காரியத்தில் இறங்குங்கள்.
பிள்ளையின் எடையை கூட்ட நல்ல புரதச்சத்து, மற்றும் கொழுப்பு சத்துள்ள உணவை கொடுத்தால் எடை கூடிவிடும்.
உதாரணமாக மீன், கோழி, முட்டை மாட்டின் மாமிசம், போன்ற உணவுகளில் ஏதாவதொன்றை மாற்றி மாற்றி தினமும் கொடுக்க வேண்டும்.
பால், பழங்களை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட பழக்கலாம்.ஆரஞ்சு பழச்சாறு நிறைய்ய தரவும்.
குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம், கேக், போன்ற இனிப்பு வகைகள் மிகவும் பிடிக்கும்.அவற்றையும் அவர்கள் எவ்வளவு சாப்பிட விருப்பமோ அவ்வளவு தரலாம்.
நொருக்கு தீணியாக வேர்க்கடலை, முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, சாரப்பருப்பு, மற்றும் தனியங்களில் சுண்டல் போன்றவற்றை நிறைய்ய செய்துக் கொடுக்களாம்.
கேழ்வரகு மாவில் உங்களுக்கு என்னென்ன தெரியுமோ அத்தனையும் செய்து தரலாம்.
உங்கள் பிள்ளையின் உடல் எடையை கூட்ட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டீர்களானால் உணவு பழக்கங்களுக்கு எந்த கட்டு திட்டங்களும் போடக்கூடாது, ஆகவே என்ன பிடிக்கின்றதோ அதைச்சாப்பிட ஒத்துழைப்பு தரவும்.
நீங்கள் பொதுவாக எல்லோருக்கும் சமைத்ததை தான் சாப்பிட வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள்.அவருக்கு என்ன பிடிக்கின்றதோ அதை மட்டும் அதிகமாக கொடுத்து விடுங்கள்.
ஒரு நாளைக்கு மூன்று முறை என்ற உணவு பழக்கம் இருந்தால் அதை மாற்றி எத்தனை முறை வேண்டுமானாலும் சாப்பிடட்டும் என்று விட்டு விடுங்கள்.
முக்கியமாக பிள்ளையை நன்கு விளையாட விடுங்கள் அப்பொழுது தான் நல்ல பசி எடுக்கும்.
இது போன்ற புதிய உணவு முறைகளையும், வாழ்க்கை முறைகளையும் மாற்றி ஒரு ஆறு மாதம் தொடர்ந்து செய்துப் பாருங்கள் பிறகு கூறுங்கள் உங்களின் பதிலை.
முக்கியமான விசயம் நீங்கள் குழந்தையிடம் நீ ஒல்லியாக இருக்கின்றாய் ஆகவே நிறைய்ய சாப்பிட வேண்டும் என்று கூறாதீர்கள். இதனால் நாமே அவர்கள் மனதில் ஒரு வித தாழ்வுமனப்பான்மையை உண்டாக்கி விடுவோம்.
இந்த பயிற்ச்சி உங்களுக்குத் தானே ஒழிய உங்கள் பிள்ளைக்கு அல்ல. ஆகவே நீங்கள் மிகவும் பொருமையுடன் இருந்து அவரின் ஆரோக்கியத்திற்க்கு பாடுபடவேண்டும்.
இது போன்று அதிக அக்கறை எடுத்துக் கொண்டால் நீங்கள் கூறியுள்ள தற்க்காலிக பிரச்சனைகள் எல்லாம் காணாமல் போய்விடும் என்பது உறுதி.ஒகே.
தங்களுக்கு மேலும் விளக்கங்கள் தேவையென்றால் தயங்காமல் கேட்கவும்.நீங்கள் எதிர்பார்த்த மாதிரி நான் எதிலும் எக்ஸ்பெர்ட் கிடையாது, இருந்தாலும் கட்டாயம் எனக்கு தெரிந்ததை கூறுகின்றேன். நன்றி.

"Enter into anybody's heart through stomach which meant for best cooking"

Dear Manohari Madam,

Thanks for your immediate reply and advise. Sure I will try these as My duty. But unfortunately he is separated from morning 6.30am(He did not eat anything except a glass of juice or Milk)and he returns back from school 5.30pm. Lunch also from school only. Anyway I try your advise during night and holidays.

My daughter is one and half year younger but she has same of my son weight and height.

With regards,
Mumtaz.

"Enter into anybody's heart through stomach which meant for best cooking"

டியர் மும்தாஜ், தங்கள் மகன் பள்ளிக்கூடம் செல்பவர் என்பதை மறந்து விட்டேன் மன்னிக்கவும். எனக்கும், உங்களைப் போன்ற இளம் தாய்மார்களுக்கும் இதே பிரச்சனை தான். வார இறுதி நாட்களும், விடுமுறை நாட்களைத்தவிர குழந்தைகளை கவனிக்க நேரம் அமைவதில்லை. இன்னும் வேலைக்கு போகும் தாய்மார்களுக்கு வார இறுதி நாட்களில் மட்டும் தான் குழந்தைகளுக்கு வேண்டியதை சரிவர கவனிக்க முடியும்.
இருந்தாலும் இதையெல்லாம் காரணம் காட்டுவதால் பிரயோசனம் இல்லை.கிடைக்கும் நேரத்தை சரிவர பயன் படுத்தினால் ஒரளவிற்க்கு பிரச்சனையைக் குறைக்கலாம் என்பது என் கருத்து.
அதிகாலை ஆறரை மணிக்கு பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் தூங்கும் முறையை அதற்கேற்றார் போல் அமைத்துக் கொள்ளவேண்டும்.
உங்களுக்கும் தெரிந்திருக்கும், பத்து வயதை ஒத்திய குழந்தைகள் கட்டாயம் குறைந்தது பத்து மணி நேரம் தூங்கவேண்டும் என்று.ஆகவே அதற்கேற்றார் போல் இரவு தூங்கச் செய்து அதிகாலை பள்ளிக்குச் செல்லும் நேரத்தில் குறைந்த பட்சம் ஒன்றரை மணி நேரம் முன்னதாக எழுப்பி, முதலில் பல்லை தேய்க்கச் செய்தவுடன், ஒரு பத்து நிமிடத்தில் பசி எடுத்து விடும்.அப்பொழுது அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, திரவ ஆகாரங்களை தவிர்த்து விட்டு, திடமான ஆகாரங்களைஊட்டிவிடுங்கள்.இட்லி,தோசை,சப்பாத்தி,என்று இதுப் போன்ற காலை உணவுகளை முன்பே தயாரித்து குளிர் சாதனப் பெட்டியில் வைத்து விட்டால் பிரச்சனை இருக்காது.வேக வைத்த கோழிமுட்டை ஒன்றை எப்படியாவது ஊட்டி சாப்பிட வைத்து விடுங்கள்.காலை உணவை சாப்பிட்ட பிறகு தான் பள்ளிக்குச் செல்ல ஆயத்தப் படுத்தவேண்டும்.ஆயத்த படுத்தி விட்டு சாப்பிட வைப்பது நல்ல பழக்கம் தான், ஆனால் அவை எல்லோருக்கும் ஒத்து வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
அதேப் போல் மாலையில் வீட்டுக்கு வந்தவுடன் முழு உணவாக கொடுத்து விடுங்கள்.ஏதாவது சினேக்ஸை அவர்களுக்கு பிடித்தமாதிரி சாப்பிட்டுக் கொள்ளட்டும்.இரவில் படுக்கவைப்பதற்க்கு முன், தினமும் ஒரு கோப்பை வெதுவெதுப்பான பாலில் அரைத்தேக்கரண்டி தேனை கலக்கி அருந்தச் செய்து படுக்க வைத்தால், நல்ல தூக்கமும் கிடைக்கும் காலையில் நல்ல பசியும் எடுக்கும்.
நேரம்மில்லை என்ற உண்மையை காரணம் காட்டாமல்,குருவி தன் குஞ்சுகளுக்கு எவ்வாறு, எந்த நேரமும் உணவை ஊட்டிக் கொண்டிருக்குமோ அதைப் போல கிடைக்கும் நேரத்தை நல்ல முறையில் திட்டமிட்டு செயல் படுத்தும் படி கேட்டுக் கொள்கின்றேன்.
இன்று வரையில் நான் என் குழந்தைகளுக்கு ஊட்டி விடுகின்றேன். அவர்கள் எவ்வளவு பெரியவர்களானாலும் எனக்கு குழந்தைகள் தானே.என் இளைய மகன் பதினொன்றாவது வகுப்பு படிக்கின்றார். தினமும் காலையில் டிபனை ஊட்டி விட்டு ஜூஸை குடிப்பாட்டி தான் பிள்ளிக்கூடம் அனுப்புகின்றேன். இரவு சாப்பாட்டை ஊட்டுவதிலை. அதேப் போல் விடுமுறை நாட்களிலும் எந்த நேரமும் வீடியோ கேம்ஸை விளையாடிக் கொண்டு எதுவுமே அவராக சாப்பிட மாட்டார். ஆனால் நான் விடுவதில்லை நீங்கள் விளையாடிக் கொண்டே இருங்கள் என்று கூறிவிட்டு உணவை ஊட்டிவிடுவேன். மூத்தவன் இன்னும் மோசம், மீனில் முள் இருக்கின்றது என்பதற்க்காக அதை சாப்பிடாமல் வெறும் குழம்பை மட்டும் பிசைந்து சாப்பிடுவார். ஆனால் மீனின் சத்து அவரைச் சேரவேண்டும் என்பதற்க்காக அதை நான் தான் ஊட்டி விடுவேன். என் மகளுக்கு இந்த கூத்தையெல்லாம் பார்க்கவே பிடிக்காமல் ஒதுங்கி விடுவார்கள்.
இதை எதற்க்கு சொல்கிறேன் என்றால் நமக்கு தேவை அவர்களின் ஆரோக்கியம் தான்.அதை முடிந்தவரையில் அளித்து விட்டால் பின்னால், நம் குழந்தைகள் ஆரோகியமாக வாழ்வார்கள் என்பதில், சந்தேகமே இல்லை என்பதால் தான் இந்த நீண்ட விளக்கத்தை அளித்தேன்.
ஆகவே நீங்கள் எனது கருத்தை ஆதரிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் முடிக்கின்றேன். நன்றி.

"Enter into anybody's heart through stomach which meant for best cooking"

Dear Manohari Madam,

It is very surprising me that you are feeding your sons still. Because I never feed them by my hand from 8 years. Because I think it will make them to escape from food. So I keep them nearby me and watching how they eat. But I compel to keep all kind of items in their plate and finish.

Next thing exactly I am doing what you have told. Honey in Milk and Boiled Egg in Morning. But sometimes they get gas problem as they eat boiled eggs in empty stomach. Still trying..Hope very soon he will gain weight.

Thanks for your kind advise..Really I feel Arusuvai.com like my mother home.

With regards,
Mumtaz

"Enter into anybody's heart through stomach which meant for best cooking"

just u can try casenuts , badam , pista in gee fry and mix with sugar and grind as a powder when ever they want to eat some thing u can as snacks in in bowel it i svery tasty

premashanmugam

மேலும் சில பதிவுகள்