யம்மி ஜாமுன்

தேதி: March 6, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

திருமதி. ஷாமி அவர்களின் யம்மி ஜாமுன் என்ற குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு, விளக்கப்படங்களுடன் செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ஷாமி அவர்களுக்கு நன்றிகள்.

 

ஸ்கிம்டு பால் பவுடர் - 2 கப்
மைதா - ஒரு கப்
விப்பிங் கிரீம் (பவுடர்) - ஒரு கப்
பால் - ஒரு கப்
பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
சர்க்கரை - 3 கப்
தண்ணீர் - 7 கப்
எண்ணெய் - பொரித்தெடுக்க


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஸ்கிம்டு பால் பவுடர், மைதா, விப் க்ரீம், பேக்கிங் பவுடர், பால் ஆகியவற்றை ஒன்றாக கலந்து நன்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை இருபது நிமிடம் ஊற விடவும்.
சர்க்கரையில் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சிக் கொள்ளவும். விருப்பப்பட்டால் வாசனைக்கு ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள், ஒரு சிட்டிகை குங்குமப்பூ சேர்த்துக் கொள்ளலாம்.
ஊறிய மாவை நெல்லிக்காய் அளவு உருண்டையாக எடுத்து ஓவல் வடிவம் அல்லது உருண்டை வடிவம் என விருப்பமான வடிவில் உருட்டிக் கொள்ளவும்.
பேனில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான தீயில் உருண்டைகளை சிவக்க பொரித்தெடுக்கவும்.
பொரித்தெடுத்த உருண்டைகளை சூடான பாகில் போட்டு ஊற விடவும்.
சுவையான யம்மி ஜாமூன் தயார்.

சூடான ஜாமுன் மீது ஒரு ஸ்கூப் வெண்ணிலா ஐஸ் க்ரீம் போட்டு பரிமாறலாம்.

பவுடர் விப்பிங் க்ரீம் பதிலாக திரவமாக கிடைக்கும் ஃப்ரெஷ் க்ரீம் பயன்படுத்தலாம். அப்படி செய்தால் பால் சேர்க்க தேவையில்லை.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அட்மின் அண்ணா அன்ட் டீமிற்கு எனது நன்றீகள். இம்புட்டு வேகமா வேலை செய்யறீங்க‌. சூப்பர்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

Vazthukal sumi. Kalakkal jamun. Yummy

Be simple be sample

அசத்துறீங்க சுமி ப்ரண்ட் பேஜ்ல பார்க்க எல்லா குறிப்பும் ரொம்ப நல்ல இருக்கு. யம்மி யம்மி ஜாமூன் தான்.

Nice receipes.congrats kQ

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிக்க‌ நன்றி ரேவ்..:0

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

ரொம்ப‌ நன்றி தேவி. உங்கள் போல‌ தோழிகளின் உற்சாகம் தான் இதற்கு காரணம்.மீண்டும் எனது நன்றிகள்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

பதிவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க‌ நன்றி வந்தனா..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....