ஈஸி பட்டாணி சீரக‌ ரைஸ்

தேதி: March 6, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. மைதிலி பாபு அவர்களின் ஈஸி பட்டாணி சீரக‌ ரைஸ் என்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய மைதிலி அவர்களுக்கு நன்றிகள்.

 

பாஸ்மதி ரைஸ் (வேக வைத்தது) - ஒரு கப்
பச்சை பட்டாணி (வேக வைத்தது) - கால் கப்
எண்ணெய் (அல்லது)நெய் - ஒரு மேசைக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று (பெரியது)
பச்சை மிளகாய் - 2-3
பூண்டு - 4
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - 5
கொத்தமல்லி - சிறிதளவு


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் (அல்லது) நெய் ஊற்றி சீரகம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
பிறகு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் வேக வைத்த பச்சை பட்டாணி, உப்பு போட்டு வதக்கவும்.
வதக்கியவற்றுடன் வேக வைத்த பாஸ்மதி அரிசி சேர்த்து மெதுவாக பிரட்டி விட்டு அதன் மேல் கொத்தமல்லித் தழையை பொடியாக நறுக்கி போடவும்.
சுவையான ஈஸி பட்டாணி சீரகம் ரைஸ் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நானும் இதே போன்ற பட்டாணி ரைஸ் (சீரகம் இல்லாமல்) இப்பத்தான் கிச்சன் குயினுக்காக பண்ணினேன் சுமி.
படங்கள் கலர்ஃபுல் :))