தேதி: March 6, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ஜுலைஹா அவர்களின் அரேபிய பட்டர் பிஸ்கட் குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய ஜுலைஹா அவர்களுக்கு நன்றிகள்.
மைதா மாவு - 800 கிராம்
முட்டை - 2
சீனி - 2 கப் ( பொடித்துக் கொள்ளவும்)
உருக்கிய நெய் - 500 கிராம்
பேக்கிங் பவுடர் - ஒரு மேசைக்கரண்டி
வெனிலா எசன்ஸ் - 4 துளி
தேவையான பொருட்களை தயாராக வைக்கவும். அவனை 280 டிகிரியில் முற்சூடு செய்யவும்.

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் பொடித்த சர்க்கரையை சேர்த்து நுரை வரும் வரை நன்கு கலக்கவும்.

அந்த கலவையுடன் நெய்யை சேர்க்கவும்.

முட்டை கலவையுடன் மைதா மாவு, பேக்கிங் பவுடர், எசன்ஸ் சேர்த்து நன்கு பூரி மாவு பதத்திற்கு பிசையவும்.

பலகை அல்லது கீழே ஒரு ப்ளாஸ்டிக் பேப்பரை விரித்து அதன் மேலே மாவை வைத்து மேலே மற்றொரு பேப்பரை போட்டு மூடி மாவை அப்பளம் போல சமமாக தேய்க்கவும்.

தேய்த்த மாவில் அச்சு அல்லது ப்ளாஸ்டிக் மூடி கொண்டு விரும்பிய வடிவில் வெட்டவும்.

வெட்டிய வடிவங்களை முற்சூடு செய்த அவனில் சுமார் 15 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும். ( அவரவர் அவனைப் பொறுத்து நேரம் மாறுபடலாம்.)

சுவையான ஹோம்மேட் அரேபிய பட்டர் பிஸ்கட் தயார்.

Comments
sumi
Sumi super super.
Be simple be sample
ரேவ்ஸ்
மிக்க நன்றீ ரேவ்ஸ்..:)
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
சூப்பர் !!!
அருமையான குக்கிஸ் நன்றி :)
நான் நானாக இருப்பதில் கர்வம் கொள்கிறேன் :)
என்றும் அன்புடன்
உங்கள் தோழி :)