குழந்தைக்கு வாந்தி உதவுங்கள்

அட்மின் அன்னா&தோழிகள் எல்லாரும் நலமா.என்னால் முன்புபோல வரமுடியல.மன்னிக்கவும்.பேத்திய சமாளிக்கவும் பேரன பாத்துக்கவும் சமைக்கவும்.வீட்டுல ஓய்வேயில்ல அதான் அப்பப்ப வந்து பாத்துட்டு போவேன்.நேரம் கிடைக்கும்போது..என் பேரன் தாய்ப்பால் இல்லாததால்.பௌடர்பால்தான் குடிக்கிரான்.குடித்ததும் எவ்வளவு தட்டினாலும் ஏப்பம் வரல சிலனேரம்.ஆனால் ஏப்பம் வந்தாலும் வரலேனாலும் வாந்தி எடுக்கிரான் பாலாவே எடுக்கிரான் என்னசெய்யலாம்.ஏதும் வைத்தியம் சொல்லுங்கம்மா தயவுசெய்து எனக்கு உடனே சொல்லுங்க தோழிகளே

எப்படி இருக்கீங்௧ நிஷா மா௉
வீட்டில் அனைவரும் நலமா

1,,,,,,, வயிற்றுக்கு போதுமான பால் காணவில்லை என்றாலும் ஏப்பம் வராது

2,,,,,,,, பால் குடிக்கும் போது சிறிது காற்றினை குழந்தை௧ள் உறிஞ்சி கொள்ளும் பால் குடித்த பின்பு ஏப்பம் வர நாம் தட்டிக்கொடுக்கும் போது ஏப்பதுடன் சேர்ந்து உறிஞ்சி கொண்ட காற்றும் சிறிதளவு பாலும் சேர்ந்து வெளிவரும்இது இயல்பே
பயப்பட தேவையில்லை

3,,,, குடித்த பால் எல்லாம் வாமிட் எடுத்தால் மருத்துவரிடம் சென்று காண்பியுங்௧ள்

4,,,,,,, சளி போன்றவை இருந்தாலும் குழந்தை௧ள் வாமிட் எடுக்கும்

ML

//வாந்தி எடுக்கிரான் பாலாவே எடுக்கிரான் என்னசெய்யலாம்.// அவர் வாந்தி எடுக்கவில்லை என்று நினைக்கிறேன். குடிக்கும் பாலில் அரைவாசி வாந்தியாக எடுக்கிறார் என்று சொல்ல முடியுமா! அல்லாமல் கொஞ்சமாக என்றால் பிரச்சினை இல்லை. //பாலாவே எடுக்கிரான்// உடனே, செமிபாடு அடைய முன்னால் வருவதால் அப்படித் தெரிகிறது. பிரச்சினை இல்லை.

பாலைச் சரியான அளவு நீர் விட்டுக் கலக்குங்கள். நீரில் வெப்பநிலை சரியாக இருக்க வேண்டும். கட்டி இல்லாமல் நன்றாகக் கலக்குங்கள். வயதிற்குச் சரியான அளவு பால் கொடுங்கள். பாட்டில், பயன்படுத்தும் பொருட்கள் எல்லாம் ஸ்டெரிலைஸ் பண்ணிப் பயன்படுத்துங்கள்.

பின்பும் பயமாக இருந்தால் டாக்டரிடம் விசாரித்துப் பாருங்கள். பால் மாற்ற வேண்டி இருந்தால் சொல்லுவார்.
~~~~~~
பழைய உறுப்பினர் நீங்களே இப்படித் தலைப்புப் போட்டால் எப்படி நிஷா! பார்த்து சரியானபடி மாற்றி விடுங்கள்.

‍- இமா க்றிஸ்

இம்மா மன்னிக்கவும் எனக்கு பிரசர் அதிகம் அதான் ஒன்னும் புரியல நீங்க நலமா சொன்னத செஞ்சுபார்க்கிரேன்

நீங்க சொன்னாபோல தலைப்பை மாத்திட்டேன் புரியவச்சதுக்கு நன்றி இமா பாலாவே எடுக்கிரான்.ஸ்டெரிலெஸ் பன்னி கட்டியில்லாமல்தான் கொடுக்கிரோம் என்னபன்னலாம் சொல்லுங்க நீங்களும்.மற்றதோழிகளும்.

நிஷாம்மா பால் எடுக்கிறான்னு சொல்லலை எங்க பாட்டி அதை கக்குறது ன்னு சொல்றாங்க எழுத்துப் பிழை என்றால் மன்னிக்கவும்.கக்குறது ரொம்ப நல்லதாம்.ஏப்பம் வரதாம் அதை நினைத்து பயப்படத்தேவையில்லைம்மா.1வயதுக்கு மேல் ஏப்பம் வருமாம்.என் பையனுக்கு வருவதில்லை.மேலிருந்து கீழாக முதுகை தட்டிவிடுங்கம்மா லேசாக.காலையும் மாலையும் Woodward 's வெந்நீர் கலந்து 1ml கொடுங்கள் அம்மா.செரிமானம் ஆகுமாம்.

நல்லெண்ணெயில் சின்ன கல்லை போட்டு சூடு பண்ணிட்டு அந்த எண்ணெய்யை காலையில் தேய்த்துக் துடைத்து விடுறாங்க குளிப்பாட்டியும் விடுறாங்க.ரொம்ப நல்லதாம் குழந்தைகளுக்கு. உடம்பெல்லாம் தேய்த்துக் விடுறாங்க ம்மா..

அன்பு தோழி. தேவி

தேவி&மெர்சி நலமா.பாலாவும் எடுக்கிரான் தன்னியாவும் எடுக்குரான்.என்னபன்னலாம்.தோழிகள் சொல்லுங்க

குழந்தை பால் குடித்தவுடனே வாந்தி எடுக்கிறானா? வாந்தி எடுக்கையில் எப்போதும் போன்று இல்லாமல் குழாயிலிருந்து தண்ணீர் பாய்வது போன்று பாலை வாயிலிருந்து Force ஆக பீச்சுகிறதா என்பதை அடுத்த முறை வாந்தி எடுக்கையில் கொஞ்சம் கவனியுங்கள். அப்படிடிருந்தால் பயப் படத்தேவையில்லை.

vomitting iruntha emiclearnu drops kuduthanga.nan avan vomit pannumpothu intha drops kuduthen,ippo vomittinge illa ma...nengalum doctorta kettu parunga

கொஞ்சமாக திரண்ட மாதிரி படுக்க வைத்தால் எடுக்கிறான? இல்லை வனிதா அக்கா சொன்னது போல் வாந்தியாக எடுக்கிறான? பையனுக்கு வீக்கல் எடுககும்போது தண்ணீர் மாதிரி வெளியேறும் பால் குடித்ததும் பாலா வெளியேறும

அன்பு தோழி. தேவி

வானி நீங்க சொல்வ்துபோல சிலசமயம் வேகமா எடுக்கிரான் சிலசமயம் தன்னிர்போல வருது டாக்டர் பாத்தப்போ ஒவ்வொரு டைமும் பாட்டில் ஸ்டரிலெஸ் பன்னி பால் கொடுங்க மருந்து வேனம்னு சொல்ராங்க அப்படிதான் செய்ரோம்.அப்படியும் அப்படியேதான் இருக்கு.என்ன பன்னலாம்னு சொல்லுங்க.ஷிவானா நீங்க எந்த ஊர்லம்மா காட்டினிங்க இங்க மருந்து கொடுக்கமாட்ராங்கமா

மேலும் சில பதிவுகள்