சிக்கன் தந்தூரி (மைக்ரோவேவ் முறை)

தேதி: March 7, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

முதல் முறை ஊற வைக்க :
கோழி தொடை - 2
எலுமிச்சை பழம் - ஒன்று
சிகப்பு மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
இரண்டாம் முறை ஊற வைக்க :
கெட்டியான தயிர் - ஒரு கப்
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
எலுமிச்சை பழம் - அரை தேக்கரண்டி
சிகப்பு மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
தந்தூரி மசாலா - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
சீரகத் தூள் - அரை தேக்கரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
கேசரி பவுடர் - 2 சிட்டிகை
கடுகு எண்ணெய் - 3 தேக்கரண்டி


 

கோழியின் தொடை பகுதியை நன்கு சுத்தம் செய்து அதிலுள்ள தோள்களை நீக்கி விட்டு பின்னர் கத்தியால் ஆழமாக ஆங்காங்கே வெட்டவும்.
பின்னர் முதல் முறை ஊற வைக்க வேண்டிய பொருட்களான எலுமிச்சை சாறு, உப்பு, மிளகாய்த் தூள் ஆகியவற்றை ஒரு சிறிய பவுளில் போட்டு நன்கு கலந்துக் கொள்ளவும்.
கலந்து வைத்த கலவையை கோழித் துண்டுகளில் முழுவதும் பூசவும். வெட்களுள்ள பகுதியில் கலவை நன்கு பூசவும். பின்னர் கோழித் துண்டுகளை 20 நிமிடம் ஊற வைக்கவும்.
மற்றொரு பெரிய பவுளில் கெட்டியான தயிர் (தயிரில் தண்ணீர் சிறிது கூட இல்லாமல் வடிக்கட்டியால் வடிக்கட்டி கொள்ளவும்) மற்றும் மேலே இரண்டாம் முறை ஊற வைக்கவென்று கொடுத்திருக்கும் பொருட்களில் கடுகு எண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும். நன்றாக பேஸ்ட் மாதிரி கலக்கிக் கொள்ளவும்.
பின்னர் 20 நிமிடங்கள் ஊறிய கோழித் துண்டுகளை இந்த மசாலா பேஸ்ட்டில் போட்டு நன்கு பிரட்டி கடுகு எண்ணெயை ஊற்றி 4 மணி நேரம் ஊற விடவும்.
நான்கு மணி நேரம் கழித்து அவனை 200 டிகிரி முற்சூடு செய்து க்ரீல் கம்பில் இரண்டு தொடைகளையும் வைத்து மைக்ரோவேவில் காம்பி மோடில் (combi mode) 180 டிகிரில் 10 நிமிடங்கள் வைக்கவும்.
முதல் 5 நிமிடம் ஆனவுடன் நிறுத்தி விட்டு கோழித் துண்டுகளின் இரண்டு புறமும் பட்டர் தடவி வைக்கவும். 10 நிமிடங்கள் கழித்து மீண்டும் பட்டர் தடவி 20 நிமிடங்கள் வேக விடவும்.
சூடான சுவையான சிக்கன் தந்தூரி ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஆஹா சூப்பரோ சூப்பர் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த குறிப்பு கண்டிப்பா செய்துட்டு சொல்றேன் வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சிக்கன் தந்தூரி சும்மா சுண்டி இழுக்குது. கலக்கல் ரெசிப்பி அன்ட் படங்கள். வாழ்த்துக்கள் ரேவதி..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

Wow super rev. Kalakks

Be simple be sample

படங்கள் பார்க்கும் போதே சாப்பிடணும் போல இருக்கு.