இறால் சாதம்

தேதி: March 9, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட, திருமதி. அமியா க்ரிஸ் அவர்களின் இந்த இறால் சாதம் குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்துகாட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய அமியா அவர்களுக்கு நன்றிகள்.

 

பாசுமதி அரிசி - 500 கிராம்
சுத்தம் செய்த இறால் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 4
ப்ளம்ஸ் - 50 கிராம்
பச்சை மிளகாய் - 7
நெய் - 50 கிராம்
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு ஏற்ப


 

அரிசியை நன்றாகக் கழுவி நீரை வடித்துக் வைக்கவும். வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை இரண்டாக நறுக்கி வைக்கவும்.
ரைஸ் குக்கரில் நெய்யை விட்டு சூடானதும் வெங்காயம், மிளகாயைப் போட்டுப் பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கி வரும் போது சுத்தம் செய்த இறாலைப் போட்டு நன்றாக வதக்கவும்.
பின்னர் அரிசி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
அரிசியின் அளவிற்கு ஏற்ப தண்ணீர் ஊற்றி மூடி விடவும். சாதம் வெந்ததும் இறக்கவும்.
சுவையான இறால் சாதம் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குறிப்பினை வெளியிட்ட அட்மின் குழுவிற்கும் குறிப்பு கொடுத்த அனைவருக்கும் என் நன்றிகள்.