கிட்ஸ் க்ராஃப்ட் - பேப்பர்கப் வால் ஹேங்கிங்

தேதி: March 9, 2015

4
Average: 3.4 (5 votes)

 

பேப்பர்கப் - ஒன்று
ஸ்ட்ரா
பெரிய மணிகள் - 21
பேப்பரிக் பெயிண்ட் - ப்ளூ, ஆரஞ்சு நிறம்
க்ரீட்டிங் சார்ட்
ப்ரஷ்
நரம்பு
ஊசி

 

மேற்சொன்னப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
ஸ்ட்ராவை 5 செ.மீ அளவில் துண்டுகளாக நறுக்கவும். மொத்தம் 28 ஸ்ட்ரா துண்டுகள் தேவை. க்ரீட்டிங் சார்ட்டை ஒரு ரூபாய் நாணயம் அளவு வட்டமாக மொத்தம் 14 துண்டுகள் நறுக்கி வைக்கவும்.
பேப்பர் கப்பின் வெளிப்புறத்தில் ஆரஞ்சுநிற பெயிண்டையும், ப்ளூநிற பெயிண்டையும் 2 செ.மீ அகலத்துக்கு மாற்றி, மாற்றி பெயிண்ட் செய்துக் கொள்ளவும். கப்பின் மேல்பக்கம் முழுவதும் ப்ளூநிற பெயிண்டை அடித்துக் கொள்ளவும்.
நரம்பை முழு ஸ்ட்ராவின் உயரத்தைவிட சிறிது கூடுதலாக அளந்துக் கொள்ளவும். இந்த அளவின் படி இருமடங்கு அதிகமாக எடுத்து ஊசியில் கோர்த்து அடியில் முடிச்சுப் போட்டுக் கொள்ளவும். அந்த நரம்பில் முதலில் க்ரீட்டிங் சார்டில் நறுக்கிய அட்டையை கோர்த்து அடுத்து ஒரு ஸ்ட்ராவை கோர்க்கவும். அடுத்து ஒரு பெரிய மணியை கோர்த்து அந்த மணியில் துளையிலேயே ஊசியை நுழைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு ஸ்ட்ரா, ஒரு சார்ட்டில் நறுக்கிய வட்டமான அட்டை, ஒரு ஸ்ட்ராவை கோர்க்கவும். அடுத்து ஒரு பெரிய மணி, ஒரு ஸ்ட்ரா, கடைசியில் ஒரு பெரிய மணியை கோர்த்து வைக்கவும்.
கோர்த்து வைத்திருக்கும் ஸ்ட்ராவை கப்பின் வாய்ப்பகுதியில் ஊசியால் துளையிட்டு அந்த துளையிலேயே மீண்டும் கோர்த்து இரண்டு முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.
கலர் கலராக ஸ்ட்ராவை தேர்ந்தெடுத்து மொத்தம் 7 வரிசைகள் இதுப்போல் கோர்த்து வைக்கவும்.
பேப்பர்கப்பின் மேல் பகுதியில் ஒரு துளையிட்டு அதன் வழியாக தேவையான அளவு உல்லன் நூலை நுழைத்து கப்பை திருப்பி உள்வழியாக பெரிய முடிச்சாக போடவும். அழகிய பேப்பர்கப் வால்ஹேங்கிங் தயார். விரும்பிய இடத்தில் இதை மாட்டி அலங்கரிக்கவும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சுலபமான சிறுவர் கைவேலை. அழகாக இருக்கிறது.

‍- இமா க்றிஸ்