செல்வ மகள் சேமிப்பு

செல்வ மகள் சேமிப்பை பற்றி தெரிந்தவங்க சொல்லுங்க தோழிஸ்

இது போல் 20 வயதிற்கு மேல் இருப்பவர்க்கு short term savings ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்.

செல்வ மகள் சேமிப்புத் திட்டம் (சுகன்யா சம்ரித்தி அக்கௌன்ட்) இது மத்திய அரசின் மூலமாக பத்து வயசுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்டிருக்கும் திட்டம்.

போஸ்ட் ஆபீஸ், மத்திய அரசிற்குட்பட்ட பேங்க்- கில் குழந்தையின் பெயரில் பெற்றோர் கணக்கை துவங்கலாம்.1000 ருபாய் துவக்க முதலீடு. பின்பு மாதந்தோறும் 100 அல்லது அதன் மடங்கை செலுத்த வேண்டும். பணத்திற்கு 9.1 சதவீத வட்டி (காம்பௌண்ட் வட்டி) உண்டு. குழந்தையின் 14 வயது வரை கட்ட வேண்டும். 18 வருடத்திற்கு பின்பு, உங்கள் தொகையிலிருந்து 50 சதவீதம் வரை கடன் பெற்றுக்கொள்ளலாம். 21 வருடத்தில் கணக்கை முடித்துக் கொள்ளலாம்.

மாதம் 1000 ரூபாய் வீதம் 14 வருடம் கட்டினால், (14* 12* 1000= 1,68,000) 21 வருட முதிர்வுக்கு பின் 6,41,000 வருவதாக கணக்கு சொல்கிறார்கள். இதில் சேமிக்கிற பணத்துக்கு வரி கிடையாது.

குறிப்பு
9.1 சதவீத வட்டி என்பது இந்த வருட வட்டி வீதம் மட்டுமே. அடுத்த வருடத்திற்கான வட்டி வீதத்தை மத்திய அரசு அறிவிக்கும்.

உன்னை போல் பிறரை நேசி.

செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் (சுகன்யா சம்ரித்தி அக்கௌன்ட்) சேமிக்க படும் பணத்திற்கு கொடுக்கப்பட்ட 9.1 சதவீத வருட வட்டி (2014ம் பைனான்சியல் ஆண்டு), இந்த வருடத்தில் (2015ம் பைனான்சியல் ஆண்டு) 9.2 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மகளுடைய எதிர் காலத்துக்காக சேமிக்க துவங்குங்கள்.

உன்னை போல் பிறரை நேசி.

Intha thittathil eppadi servathu

மேலும் சில பதிவுகள்